Justice For Neha.. கர்நாடக மாணவியின் மரணத்தில் நடந்தது என்ன.? முழு விவரம்

Justice For Neha: கர்நாடகா கல்லூரி மாணவி நேகா கொலை செய்யப்பட்ட சம்பவம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. கடத்தல் ஏப்ரல் 18ஆம் தேதி கல்லூரி வளாகத்திலேயே பயாஸ் என்ற மாணவன் இப்படி ஒரு கொடூரத்தை நிகழ்த்தி இருந்தார்.

சிசிடிவி காட்சிகளில் அவர் நேகாவை சரமாரியாக குத்தி கொன்ற சம்பவம் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. நீண்ட நாட்களாக தன் காதலை கூறியும் நேகா தொடர்ந்து மறுத்து வந்ததால்தான் இப்படி ஒரு கொடூரத்தை அவர் அரங்கேற்றி இருக்கிறார்.

அதை தொடர்ந்து நேகாவுக்கு நீதி வேண்டும் என்ற ஹேஷ் டேக்குகளும் பரவத் தொடங்கியது. தற்போது கைது செய்யப்பட்டுள்ள பயாஸ் கடுமையான முறையில் தண்டிக்கப்பட வேண்டும் என மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.

நேகாவுக்கு நீதி வேண்டும்

இதில் முக்கிய திருப்பமாக பயாசின் பெற்றோரும் தன் மகன் கொடூரமாக தண்டிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். மேலும் நேகா ரொம்பவும் நல்ல பெண். அவருடைய குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

ஆனால் பயாஸ், நேகா இருவரும் காதலித்தார்கள். நண்பர்கள் கிடையாது என அவருடைய தாய் கூறியுள்ளார். இது ஒரு குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில் நேகாவின் தந்தை அதை மறுத்துள்ளார்.

மேலும் லவ் ஜிகாத் என்ற கோணத்தில் தற்போது இந்த பிரச்சனை திரும்பியுள்ளது. எது எப்படி இருந்தாலும் மனிதநேயம் அற்ற இந்த செயலுக்கு நிச்சயம் மோசமான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதுதான் அனைவரின் ஆதங்கமாக இருக்கிறது.

Next Story

- Advertisement -