புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

கமலுக்கும் விஜய் சேதுபதிக்கும் உள்ள 6 வித்தியாசங்கள்.. பிக்பாஸ் வார இறுதி ஹைலைட்ஸ்

Biggboss 8: பிக்பாஸ் நிகழ்ச்சிய ஆரம்பித்து ஒரு வாரம் முடிந்து விட்டது. வார நாட்கள் முழுவதிலும் போட்டியாளர்கள் முடிந்த அளவு கன்டென்ட் கொடுத்து நாளை கடத்தினார்கள். இதில் ரவீந்தர் செய்த பிராங்க் மட்டும் சர்ச்சையாக மாறியது.

அதை அடுத்து சிறு சிறு மன வருத்தங்கள் கருத்து வேறுபாடுகள் இருந்த நிலையில் வார இறுதிக்காக போட்டியாளர்கள் மட்டுமல்லாமல் ரசிகர்களும் காத்திருந்தனர். அதன்படி நேற்று விஜய் சேதுபதியின் ஆரம்பமே அசத்தலாக இருந்தது.

வழவழ கொழ கொழ என இல்லாமல் முகத்திற்கு நேரே பட்டென அவர் பேசியது அப்பாடா மனசுல இருக்க பாரமே குறைஞ்சிடுச்சு என்ற ரீதியில் இருந்தது. பார்வையாளர்களும் சளைக்காமல் கைதட்டி அவரை உற்சாகப்படுத்தினார்கள்.

இது ஒரு பக்கம் இருக்க கமல் தொகுத்து வழங்கும் முறை தற்போது விஜய் சேதுபதி கையில் எடுத்த யுக்தி ஆகியவற்றை ரசிகர்கள் கம்பேர் செய்து வருகின்றனர். அது மட்டும் இன்றி இருவருக்கும் இடையே ஆறு வித்தியாசங்களை வரிசைப்படுத்தலாம்.

முதலாவதாக கமல் யாருடைய மனதையும் நோகாமல் பேசுவார். ஆனால் விஜய் சேதுபதி மனதில் பட்டதை வெளிப்படையாக வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என பேசினார். இரண்டாவது கமல் ஒருவர் தப்பு செய்தால் அதை அழுத்தமாக சுட்டிக்காட்ட மாட்டார்.

ஆனால் மக்கள் செல்வன் ஜாக்குலின், தர்ஷா இருவரிடமும் ஆட்டிட்யூட் காட்டாதீர்கள் என நேரடியாக சுட்டிக்காட்டினார். இதன் மூலம் அவர்களை நல்வழிப்படுத்தவும் முயற்சிக்கிறார். உண்மையில் இது பாராட்ட வேண்டிய ஒன்றுதான்.

விஜய் சேதுபதியின் புது அவதாரம்

மூன்றாவது கமல் வரும்போது கைதட்டலுக்காக சில விஷயங்களை பேசுவது போல் இருக்கும். ஆனால் தற்போது விஜய் சேதுபதியின் பேச்சு கைதட்ட வைக்கிறது. நான்காவதாக ஆண்டவர் போட்டியாளர்களை ரோஸ்ட் செய்வது எல்லாம் அத்திப்பூத்தாற்போல் இருக்கும்.

அதிலும் முதல் வாரம் ஜாலியாக தான் கொண்டு செல்வார். ஆனால் தற்போது பேசுவதற்கே நேரம் இல்லை நேரடியாக ரோஸ்ட் தான் என்று ரீதியில் சனிக்கிழமை எபிசோட் இருந்தது. இது ஒரு விதத்தில் பார்வையாளர்களுக்கு மனநிறைவையும் கொடுத்துள்ளது.

ஐந்தாவது கமல் சுற்றி வளைத்து சில விஷயங்களை பேசுவார். ஆனால் தற்போதைய தொகுப்பாளர் நேரடியாக பேசி இதுதான் நான் என முதல் வாரத்திலேயே போட்டியாளர்களுக்கு புரிய வைத்து விட்டார். ஆறாவது முந்தைய சீசன்களில் மக்களின் கருத்துக்களுக்கு பெரிய முக்கியத்துவம் இருக்காது.

ஆனால் தற்போது மக்களின் மனநிலையை புரிந்து கொண்டு விஜய் சேதுபதி மேடையில் பேசியுள்ளார். இதுதான் அவருக்கு தற்போது பாராட்டுகளை பெற்றுக் கொடுத்துள்ளது. மேலும் விஜய் டிவி முதல் முறையாக நல்லவேளை பார்த்திருக்கிறீர்கள் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இப்படியாக விஜய் சேதுபதியின் அவதாரம் அனைவரையும் ஈர்த்துள்ளது. அதே சமயம் எதற்காக இப்படி கரடு முரடாக பேச வேண்டும் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது. உண்மையில் கமல் வயதிற்கு மரியாதை கொடுத்து போட்டியாளர்கள் அடக்கி வாசித்தார்கள்.

ஆனால் விஜய் சேதுபதி யதார்த்தமான மனிதர். அப்பா அண்ணன் போன்ற முறைகளை சொல்லியும் போட்டியாளர்கள் அவரை அழைத்து வருகின்றனர். இப்படியே உரிமை எடுத்துக் கொண்டால் அது சரிப்பட்டு வராது என்று தான் அவர் ரீல் மகள் சாச்சனா முதற்கொண்டு அனைவரையும் கலங்கடித்து விட்டார்.

- Advertisement -

Trending News