காலம் கடந்து பேசும், ரஜினியின் கடைசி இயக்குனர் இவர் தான்.. மிஷ்கின் கொடுத்த அப்டேட்டால் மிரளும் திரையுலகம்

சமீபகாலமாகவே ரஜினி பற்றிய தகவல்கள் தான் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அதாவது தற்போது அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் சூப்பர் ஸ்டார் இளம் ஹீரோக்களுக்கே சவால் விடும் எனர்ஜியுடன் வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்த அளவுக்கு அவர் நடிக்கப் போகும் படங்களின் அப்டேட்டுகள் வந்து கொண்டிருக்கிறது.

அதே சமயத்தில் சூப்பர் ஸ்டார் விரைவில் சினிமாவில் இருந்து ஓய்வு பெற போகிறார் என்ற தகவல்களும் ரசிகர்களை வேதனை அடைய செய்கிறது. இருப்பினும் தற்போது 70 வயதை கடந்துள்ள அவர் இதுவரை நடித்தது போதும் என்ற முடிவில் இருக்கிறார். அதனாலேயே தன்னுடைய கடைசி படம் யாரும் எதிர்பார்க்காத லெவலில் மாஸ் ஹிட் அடிக்க வேண்டும் என அவர் முடிவெடுத்துள்ளார்.

Also read: மும்பையில் இருந்து கடும் கோபத்தில் வந்த ரஜினி.. மகளின் குளறுபடியால் நிம்மதி தொலைந்தது

அதற்காக அவர் தேர்ந்தெடுத்த இயக்குனர் தான் லோகேஷ் கனகராஜ். இதுவரை முன்னணி இயக்குனர்கள் பலரும் ரஜினிக்கு பல ஹிட் படங்களை கொடுத்திருக்கின்றனர். ஆனாலும் அவர் இப்போது லோகேஷை தேர்ந்தெடுத்து இருப்பது அவர் மேல் இருக்கும் அதீத நம்பிக்கையால் தான். விக்ரம் திரைப்படமும் அதற்கு ஒரு காரணம் என்பதை நம்மால் மறுக்க முடியாது.

அந்த வகையில் தற்போது லியோ படத்தில் பிசியாக இருக்கும் லோகேஷ் அடுத்ததாக ரஜினியை வைத்து படம் இயக்குவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். மேலும் விக்ரம் படத்தை காட்டிலும் நான்கு மடங்கு தரமான ஒரு கதையை தான் அவர் உருவாக்க இருக்கிறாராம். அதன்படி சூப்பர் ஸ்டாரின் கடைசி படம் காலம் கடந்தும் அவர் பெயர் சொல்லும் வகையில் இருக்குமாம்.

Also read: பிரம்மாண்டத்தின் உச்சம் தொட போகும் ஜெயிலர்.. பெரிய தலைகளுக்கு கொக்கி போடும் நெல்சன்

இதுதான் இப்போது கோலிவுட்டின் சூடான செய்தியாக பரவிக் கொண்டிருக்கிறது. அது மட்டுமின்றி இந்த தகவலை இயக்குனர் மிஷ்கின் ஒரு பேட்டியில் வெளிப்படையாக போட்டு உடைத்திருக்கிறார். லியோ படத்தில் நடித்துள்ள இவர் சமீப காலமாகவே லோகேஷ் குறித்து ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து வருகிறார். அந்த வகையில் இந்த தகவலையும் அவர் வெளிப்படையாக கூறி லோகேஷுக்கு கிடைத்த பெரும் பாக்கியம் இது எனவும் தெரிவித்துள்ளார்.

ஏனென்றால் சூப்பர் ஸ்டார் படத்தை இயக்க வேண்டும் என்பது பலரின் கனவாக இருக்கிறது. அதிலும் அவருடைய கடைசி படம் என்றால் எந்த அளவுக்கு அது ஸ்பெஷலாக இருக்கும். அப்படி ஒரு பாக்கியத்தை பெற்றுள்ள லோகேஷ் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்த வகையில் மிஷ்கின் கொடுத்துள்ள இந்த அப்டேட் ஒட்டுமொத்த திரையுலகையும் மிரளச் செய்யும் வகையில் இருக்கிறது.

Also read: 1000 கோடி முதலீடு, லைக்காவால் விழி பிதுங்கி நிற்கும் ரஜினி, அஜித்.. மரண அடி வாங்க போகும் டாப் ஹீரோக்களின் 4 படங்கள்

- Advertisement -