கொரோனா காலத்தில் அனைவரும் வீட்டிற்குள் இருப்பதற்கான சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. அந்த சமயத்தில் மக்கள் பொழுதை கழிப்பதற்காக என்ன செய்வதென்று தெரியாமல் அதிக கவனத்தை ஈர்த்தது ஆன்லைன் கேம். இதில் பலவகையான விளையாட்டு அதிகமாக பிரபலமாகி இருந்தாலும் பணத்தை வைத்து ஆடக்கூடிய மிக மோசமான ஒரு கேம் என்றால் அது ஆன்லைன் ரம்மி கேம். இதில் விளையாட ஆரம்பித்த பல பேர் இதற்கு அடிமையாகி விட்டார்கள் என்று சொல்லலாம்.
இதில் விளையாண்ட பலரும் பணத்தை இழந்ததோடு மட்டுமல்லாமல் அவர்களுடைய வாழ்வாதாரத்தையும் கெடுக்கும் அளவிற்கு மிக மோசமான நிலைமைக்கு கொண்டு போய்விட்டது. இதனால் இதனை தடை செய்யும் விதமாக பல போராட்டங்கள் நடந்தது. அதன் பின் தமிழக அரசாங்கம் இதற்கு ஒரு ஆணையை பிறப்பித்து ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனாலும் இதற்கான சரியான முடிவுகள் எடுக்க முடியாமல் இருந்து வருகிறது.
Also read: தீபாவளி ரிலீஸை குறி வைக்கும் டாப் 2 ஹீரோக்களின் படங்கள்.. இந்தியன் 2 வுக்கு டஃப் கொடுக்க வரும் ஹீரோ
இந்நிலையில் தற்போது இதைவிட மிகக் கொடுமையான ஒரு விஷயம் தமிழக மக்களை ஆட்டிப் படைக்கிறது என்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒருவர் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஒரு ட்விட்டர் போட்டு சர்ச்சையை கிளப்பி வருகிறது. அதாவது ஆன்லைன் ரம்மியை விட அதிக அளவில் ஆட்டிப் படைக்கிறது என்றால் அது டாஸ்மார்க் தான்.
இது பல பேரின் உயிரை கெடுப்பது மட்டுமல்லாமல் அவர்களுடைய குடும்பத்தையும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதனால் இதை தடுப்பதற்கு ஒரு முயற்சி செய்யுங்கள் என்று கோரிக்கை வைத்திருக்கிறார். அத்துடன் என்னை அரசியலுக்கு இழுக்காதீங்க. அதே மாதிரி நான் அரசியலுக்கு வந்தாலும் நீங்கள் யாரும் தாங்க மாட்டீர்கள் என்று முதலமைச்சருக்கு டேக் செய்திருக்கிறார்.
Also read: ரஜினிக்கு நிகரான கதாபாத்திரம் கொடுங்க இல்லன்னா நடிக்க மாட்டேன்.. அலப்பறை செய்த முன்னணி நடிகர்
இப்பொழுது இந்த ட்விட்டர் தான் மிக பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.இந்த மாதிரி ஒரு ட்விட்டர் போட்டது பிக் பாஸ் டைட்டில் வின்னரான பாலாஜி முருகதாஸ். இவர் முதலில் மாடலிங்கில் அதிக ஆர்வத்தை காட்டி வந்தார். பின்பு பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆரிக்கு எதிரான ஒரு போட்டியாளராக வந்தார். இவர் வீட்டுக்குள் இருக்கும்போதே பலசர்ச்சைகளில் பெயர் அடிபட்டது. அடுத்ததாக இதில் ரன்னர் அப் ஆனார்.
அடுத்ததாக கடந்தாண்டு நடைபெற்ற பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்று சிம்புவின் கைகளால் டைட்டில் வின்னர் பட்டத்தையும் பெற்றார். அதன் பிறகும் பல சர்ச்சையில் சிக்கி வந்த இவர் தற்போது போட்டிருக்கும் இந்த ஒரு விஷயம் நல்லதாக இருந்தாலும் இவருடைய அடாவடித்தனமான பேச்சு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
Also read: ஜவான் படத்தில் நயன்தாராவுக்கு அட்லீ போட்ட கண்டிஷன்.. மாட்டிக்கொண்டு முழிக்கும் லேடி சூப்பர் ஸ்டார்