தளபதி-67 படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜின் ஹீரோ இவர்தான்.. வலையில் சிக்கிய சுறா!

தமிழ் திரையுலகில் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் அதன் பின்னர் கைதி, மாஸ்டர் மற்றும் விக்ரம் ஆகிய 3 சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

அடுத்ததாக தற்போது தளபதி 67 படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்த கதாநாயகன் பற்றிய தகவல் தற்போது வெளியாகி இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கிறது.

Also Read: தமிழ்நாட்டில் வசூலை வாரி குவித்த முதல் 5 படங்கள்.. இரண்டே வாரத்தில் விக்ரமை துவம்சம் செய்த பொன்னியின் செல்வன்

ஏற்கனவே தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் துவங்கும் முடிவில் படக்குழு இருக்கிறது. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் தளபதி 67 படத்தை முடித்துவிட்டு கேஜிஎஃப் படத்தின் கதாநாயகன் கன்னட ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிக்கும் திரைப்படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப்படம் பெங்களூர் பிரபலம் ஒருவரின் கதையை அடிப்படையாகக் கொண்டது என்றும் மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்த படம் பிரம்மாண்டமாக உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Also Read: தோனியுடன் கூட்டணி போடும் விஜய்.. யாரும் எதிர்பார்க்காத தளபதி-70 அப்டேட்

எனவே தளபதி 67 படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ்-யாஷ் கூட்டணியில் உருவாகும் இந்த புதிய படம் நிச்சயம் தென்னிந்திய திரையுலகில் ஒரு மிகப்பெரிய ஹிட் கொடுக்கும் என்றும் ரசிகர்கள் இப்போதிருந்தே இந்த படத்தின் அப்டேட்டை கேட்டதும் குஷியாகி இருக்கின்றனர்.

இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாக பரவிக்கொண்டிருக்கிறது. கூடிய விரைவில் லோகேஷ் கனகராஜ்- யாஷ் இணையும் புதிய படத்தின் முழு விபரமும் வெளியாக இருக்கிறது.

Also Read: தமிழ் சினிமாவை உற்று பார்க்க வைத்த 2 படங்கள்.. பொறாமையில் KGF, சீதாராமை வைத்து பண்ணும் அரசியல்

Stay Connected

1,170,254FansLike
132,060FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -