அஜித்துக்கு இப்படி ஒரு பிரச்சனையா.? வீரம் படத்துக்காக அவஸ்தைப்பட்ட விநாயகம்

Ajith has a problem: சினிமாவில் நடிக்கக்கூடிய பிரபலங்கள் அனைவரும் தன்னை ஒரு அழகாகவும் ஸ்டைலாகவும் காட்டிக் கொள்ள விரும்புவார்கள். ஆனால் அஜித்தோ நான் இப்படித்தான் இருப்பேன். அதற்கேற்ற மாதிரி தான் நடிக்கவும் செய்வேன் என்று அவருக்குள்ளேயே ஒரு வட்டத்தை போட்டுக் கொண்டு அதன்படி நடிக்க கூடியவர்.

ஆனாலும் இவர் எப்படி இருந்தாலும் நாங்கள் ஏற்றுக் கொள்வோம் என்று ரசிகர்கள் இவரை தூக்கி வைத்துக் கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில் அஜித் அவருடைய ஒரிஜினல் லுக் மட்டுமே வைத்து பல படங்களில் நடித்து வருகிறார். இன்னும் சொல்லப்போனால் தேவையில்லாத காட்சிகளில் முடியை டையடித்துக் கொண்டு இளமையாக காட்ட வேண்டும் என்று நினைத்ததில்லை.

ஆனால் இவர் இப்படி இருப்பதற்கு வேறு ஒரு காரணமும் இருக்கிறதாம். என்னவென்றால் இவருக்கு தோல் பிரச்சினை மற்றும் அலர்ஜி சம்பந்தமான பிரச்சினைகளும் இருக்கிறது. ஏதாவது புதுசு புதுசா முயற்சி எடுத்து அதை பயன்படுத்தினால் உடனே இவருக்கு அலர்ஜி மாதிரி உடம்பு முழுவதும் பிரச்சனையை கொடுத்து விடும்.

Also read: அஜித்தின் மூளையை சலவை செய்யும் சிறுத்தை சிவா.. வேறு வழி இல்லாமல் கிரீன் சிக்னல் கொடுக்கப் போகும் ஏகே

முக்கியமாக தலையில் டை அடிக்க வேண்டும் என்றால் தமிழ்நாட்டில் இருக்கும் எந்த கருப்பு சாயமும் ஒத்தே வராது. அதனால் தான் வீரம் படத்தில் வெள்ளை நறையுடன அண்ணன் கதாபாத்திரத்தில் விநாயகமாக நடித்துக் கொடுத்திருப்பார். ஆனால் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் நேரத்தில் தமன்னாக்கு ஜோடியாக ரொமான்ஸ் பண்ண வேண்டும் என்பதால் அஜித் தலைக்கு டை அடிக்க ஏற்பாடு நடந்திருக்கிறது.

அதனால் தமிழ்நாட்டில் இல்லாமல் வெளிநாட்டில் இருந்து ஸ்பெஷலாக கருப்பு சாயத்தை கொண்டு வந்து அதை அஜித் தலைக்கு அடித்திருக்கிறார்கள். ஆனால் அடித்த கொஞ்ச நேரத்திலேயே ரொம்பவே அலர்ஜியால் அவஸ்தை பட்டு பிரச்சனையை சந்தித்திருக்கிறார். அதன்பின்பே இதெல்லாம் வேண்டாம் ஒரிஜினல் கலர் வைத்து நான் நடிக்கிறேன் என்று சொல்லி வெள்ளை முடியுடன் அஜித் நடித்துக் கொடுத்திருக்கிறார்.

இதனால்தான் அடுத்தடுத்த படங்களிலும் எந்தவித ரிஸ்க்கும் எடுக்காமல் வெள்ளை முடியுடன் தொடர்ந்து நடித்திருக்கிறார். இவருக்கு ஏற்ற மாதிரி பட குழுவில் உள்ளவர்களும் எல்லாத்துக்கும் ஓகே என்று சொல்லி அஜித் நடித்தால் மட்டுமே போதும் என்பதற்கு ஏற்ப படத்தை இயக்கிக் கொண்டு வருகிறார்கள். அஜித்துக்கு இப்படி ஒரு பிரச்சனை இருப்பதினால் தான் தலையில் எந்தவித சாயத்தையும் பூசாமல் வருகிறார்.

Also read: லவ் பண்ணிட்டு 4 ஹீரோக்களை கழட்டி விட்ட திரிஷா.. மிளகாய் பொடி மாமிக்கு ஆப்பு அடிச்ச அஜித்