வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

விஜய், அஜித், விக்ரம் என மூவரும் நிராகரித்த ஒரே படம்.. புத்திசாலித்தனமாக பயன்படுத்திக் கொண்ட சூர்யா

பொதுவாக சினிமாவில் நடிக்கும் நட்சத்திரங்கள் ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கே பல கதைகளை கேட்பார்கள். அதில் சில நடிகர்கள் வேண்டாம் என்று நிராகரிக்கும் கதைகள் மற்றொரு நடிகரால் நடிக்கப்பட்டு, வெளிவந்து மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும்.

அப்படி ஒரு விஷயம் தான் சூர்யாவின் நடிப்பில் வெளிவந்த காக்க காக்க திரைப்படத்திலும் நடந்துள்ளது. கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா, ஜோதிகா மற்றும் பலர் நடித்த காக்க காக்க திரைப்படம் சூர்யாவுக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

போலீஸ் ஆபீஸராக சூர்யா நடித்த அந்த திரைப்படம் அவருடைய திரை வாழ்வில் ஒரு முக்கிய படமாக இன்று வரை இருக்கிறது. சொல்லப்போனால் அந்த கதாபாத்திரத்திற்கு சூர்யாவை தவிர வேறு யாரும் பொருத்தமாக இருக்க மாட்டார்கள் என்று பலரும் சொல்லும் அளவிற்கு இருந்தது அவருடைய நடிப்பு.

ஆனால் அந்தப் படத்திற்காக கௌதம் மேனன் முதலில் தேர்ந்தெடுத்தது விஜய்யை தான். அவரிடம் தான் கௌதம் மேனன் முதலில் இந்த படத்தின் கதையை கூறியிருக்கிறார். ஆனால் சில காரணங்களால் விஜய்யால் இந்த படத்தில் நடிக்க முடியவில்லை.

அதன் பிறகு அவர் இந்த கதையை அஜித்துக்கு கூறியிருக்கிறார். அவர் கதையில் சில மாற்றங்கள் சொன்னதன் காரணமாக இந்த படத்தில் நடிக்க முடியவில்லை. அதன் பிறகு விக்ரமிடம் கௌதம் மேனன் இந்த கதையை கூறி இருக்கிறார். ஆனால் அவராலும் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது.

இதையெல்லாம் கடந்துதான் கௌதம் மேனன் சூர்யாவுக்கு இந்த கதையை கூறியிருக்கிறார். ஒருவகையில் ஜோதிகா தான் இதற்கு காரணமாகவும் இருந்துள்ளார். பின்னர் கதையை கேட்ட சூர்யாவுக்கு ரொம்ப பிடித்துப் போகவே அவர் இந்த படத்தில் நடிப்பதற்கு சம்மதித்துள்ளார்.

அதன் பிறகு தான் சூர்யாவும், ஜோதிகாவும் இந்த திரைப்படத்தில் இணைந்து நடித்தனர். இப்படி பல நடிகர்களால் நடிக்க முடியாமல் போன இந்தப் படம் சூர்யாவுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை கொடுத்தது. அதன் பிறகு சூர்யா பல ஆக்சன் திரைப்படங்களில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Trending News