ஒரே படத்தால் தலைகீழாக மாறிய நிலை.. ரஜினி, விஜய்யை பின்னுக்குத் தள்ளி கோடிகளின் அதிபதியான நடிகர்

Actor Rajini: தற்போது டாப் நடிகர்களை வைத்து படம் எடுக்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 300 கோடியாவது கையில் இருக்க வேண்டும். ஏனென்றால் ஹீரோக்களின் சம்பளமே 100 கோடியை தாண்டி இருக்கிறது.

அதில் தற்போது ரஜினி, விஜய் இருவரும் தான் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலில் இருக்கின்றனர். அதேபோல் இவர்களிடம் தான் அதிக சொத்தும் இருக்கிறது.

அதன்படி ரஜினியின் தற்போதைய சொத்து மதிப்பு 450 கோடியாக உள்ளது. அதேபோல் விஜய்யின் சொத்து மதிப்பு 410 கோடி என்றும் சொல்லப்படுகிறது.

ஆனால் தற்போது இவர்களை பின்னுக்குத் தள்ளி முன்னேறி இருக்கிறார் உலக நாயகன். இதற்கு முக்கிய காரணம் விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றி தான்.

நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் கமல்

கமலின் தயாரிப்பில் வெற்றி கண்ட இப்படம் தான் தற்போது இவரை நம்பர் ஒன் அந்தஸ்திற்கு கொண்டு சென்றுள்ளது. இப்படத்திற்கு பிறகு இவருடைய சம்பளமும் உயர்ந்து விட்டது.

மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமும் இவருக்கு பெரும் தொகை சம்பளமாக வருகிறது. தற்போது இவர் கைவசம் ஏகப்பட்ட படங்களும் உள்ளது.

இப்படியாக நடிப்பு, தயாரிப்பு என கமலுக்கு வருமானம் குவிந்து கொண்டிருக்கிறது. அதை வைத்து பார்க்கும் போது இவருடைய சொத்து மதிப்பு 500 கோடியை தாண்டும் என்கின்றனர்.

தற்போது இவருடைய நடிப்பில் இந்தியன் 2, கல்கி ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்