பாலா இல்லைனா இந்த படம் வெற்றி அடைந்திருக்காது.. அந்தர் பல்ட்டி அடித்த 22 வயது நடிகை

இயக்குனர் பாலாவுக்கு ஒரு நடிகர், நடிகைகளிடம் எப்படி திறம்பட நடிப்பை வாங்க வேண்டும் என்பது நன்கு தெரியும். அவர்களிடம் அதட்டி, உருட்டி நடிப்பை வாங்கி விடுவார். மேலும் இவர் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் பலர் பாலா மிகவும் கோபக்காரர் என்று கூறியுள்ளனர்.

ஆனால் தற்போது 22 வயது இளம் நடிகை ஒருவர், பாலா தான் தனக்கு நடிப்பை சொல்லிக் கொடுத்தார். அவருடன் நடித்த படம் தான் எனது வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது என பேசியுள்ளார். அதாவது தற்போது இளைஞர்கள் கொண்டாடும் படமாக திரையரங்குகளில் வெற்றி நடை போடுகிறது லவ் டுடே.

Also Read : காம பிசாசுகளுக்கு ரூட் போட்டுக்கொடுத்த லவ் டுடே பிரதீப்.. காட்சிகளை தூக்க வேண்டுமென வலுக்கும் எதிர்ப்பு

இந்தப் படத்தில் இயக்குனர் பிரதீப்புக்கு ஜோடியாக இளம் நடிகை இவானா நடித்துள்ளார். தற்போது லவ் டுடே படத்தின் வெற்றியை தொடர்ந்த இவானா பல ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் பாலாவை பற்றி இவர் பேசி உள்ளார்.

அதாவது பாலா இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் வெளியான நாச்சியார் படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக இவானா நடித்திருந்தார். ஆகையால் நாச்சியார் படத்தில் நடிக்கும் போது தான் நடிப்பு என்றால் எப்படி என்பது தெரிய வந்ததாக கூறியுள்ளார். இப்படத்திற்கு முன்னதாக பல படங்களில் சிறு கதாபாத்திரங்களில் இவானா நடித்துள்ளார்.

Also Read : நெகட்டிவ் க்ளைமாக்ஸுக்கு பெயர்போன 5 இயக்குனர்கள்.. எப்பொழுதுமே அழவைக்கும் பாலா

ஆனால் நாச்சியார் படத்தில் இவானா நடிக்கும் போது ஒரு சிரிப்பு என்றால் எவ்வளவு சிரிக்க வேண்டும், எவ்வளவு பல் தெரிய வேண்டும் என்பதை ஒவ்வொன்றாக பாலா கற்றுக் கொடுத்ததாக கூறியுள்ளார். அவ்வாறு ஒவ்வொரு சின்ன விஷயத்துக்கும் பாலா மெனக்கிடுவார்.

நாச்சியார் படம் எனக்கு நடிப்பை கற்றுத்தந்த பள்ளிக்கூடம் ஆகத்தான் பார்க்கிறேன் என இவானா கூறியுள்ளார். லவ் டுடே படத்தில் என்னுடைய நடிப்பை பலரும் பாராட்டுகிறார்கள், இதற்கு காரணம் பாலா சார் தான் என பெருமையாக பேசியிருந்தார்.

Also Read : 22 வயதில் படுக்கைஅறை காட்சி உங்க வீட்ல எப்படி ஒத்துக்கிட்டாங்க? அசரவைக்கும் பதில் அளித்த இவானா

- Advertisement -