ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

பிக்பாஸ் டைட்டில் வாய்ப்பே இல்ல, வந்தவரை லாபம்.. சைலண்டா பணப்பெட்டியை தூக்கிய அதிமேதாவி

Biggboss 7: இன்று பிக்பாஸ் வீடு குழப்ப நிலையில் இருக்கிறது. எப்போதுமே சீசன் இறுதியில் பிக்பாஸ் பணப்பெட்டியை கொடுத்து யாரையாவது வெளியேற்றுவார். அதன்படி இந்த சீசனிலும் தற்போது பணப்பெட்டி வைக்கப்பட்டு இருக்கிறது.

அதை யார் எடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு தான் இப்போது அதிகமாக இருக்கிறது. ஆனால் வீட்டில் உள்ளவர்கள் 5 லட்சம் வரை ஆஃபர் கொடுத்தும் அதை எடுக்கவில்லை. மேலும் 10 லட்சம் தாண்டினால் எடுக்கலாம் என்ற சிந்தனையிலும் சிலர் இருக்கின்றனர்.

இதில் விஜய் வர்மா பணத்தை எடுப்பதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது என கருத்து கணிப்புகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. அப்படி அவர் எடுத்தால் இந்த வாரத்தின் நடுவில் ஒரு எவிக்ஷன் இருக்கும். ஆனால் உண்மையில் பணப்பெட்டியை எடுத்தது மாயா தான் என்ற தகவல்கள் இப்போது கசிந்துள்ளது.

Also read: பிக் பாசில் கட்டம் கட்டி அடிக்கும் மாயா.. திட்டம் புரியாமல் பலிக்கிடா ஆன போட்டியாளர்கள்

இதுதான் இப்போது நம்ப முடியாத ஆச்சர்யமாக இருக்கிறது. ஏனென்றால் பிக்பாஸ் டைட்டிலை பெற வேண்டும் என்பதற்காக கடுமையான போட்டியாளராக இருந்த பிரதீப்பை திட்டம் போட்டு வெளியேற்றினார். அதைத்தொடர்ந்து ஒவ்வொருவரையும் காலி செய்ய இவர் செய்த சதிகள் நாம் அறிந்தது தான்.

இப்படி அதிமேதாவி போல் ஒவ்வொன்றையும் செய்து வந்த மாயா பணப்பெட்டியை தூக்கி இருப்பது எதிர்பாராதது. ஆனால் வார இறுதியில் வரும் கைத்தட்டல்களை வைத்தே நமக்கு வெளியில் அதிக வெறுப்பு இருக்கிறது என்பது மாயாவுக்கு தெரிந்திருக்கும்.

அதனாலேயே வந்தவரை லாபம் என பணப்பெட்டியை அவர் எடுத்திருக்கலாம். மேலும் பிக் பாஸ் டைட்டில் நமக்கு கிடைக்காது என்பதும் அவருக்கு நிச்சயமாக தெரிந்திருக்கிறது. அதன் காரணமாகவே மாயா சைலண்டாக பிக்பாஸ் கொடுத்த இந்த ஆஃபரை எடுத்திருக்கிறார்.

Also read: காசு, பணம், துட்டு, மணி.. பிக்பாஸ் கொடுக்கும் ஆஃபர், பெட்டியை தூக்கப் போவது யாரு.?

- Advertisement -

Trending News