மாயா, கமலுக்காக விஜய் டிவி செய்த மட்டமான வேலை.. பிக்பாஸை விட்டு வெளியேறும் பலி ஆடு, ஓட்டிங் லிஸ்ட்

Biggboss 7 Tamil Voting List: பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கும் இந்த சூழலில் ஆட்டமும் சூடு பிடித்துள்ளது. கடந்த வாரம் சரவண விக்ரம் பிக் பாஸை விட்டு குறைந்த ஓட்டுக்களை பெற்று வெளியேறியிருந்தார்.

அதை அடுத்து இந்த வாரம் ஓட்டிங் நிலவரம் பயங்கர சுவாரஸ்யமாக இருந்தது. அதாவது மாயா குறைவான ஓட்டுகளை பெற்று கடைசி இடத்தை பிடித்திருந்தார். இருந்தாலும் அவரை கமல் அவ்வளவு சீக்கிரம் வெளியேற்றி விட மாட்டார் என்பது நாம் அறிந்தது தான்.

அதனாலேயே ரவீனா மற்றும் நிக்சன் இருவரில் ஒருவர் வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதில் நிக்சனை தான் பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் வழக்கம் போல் விஜய் டிவி தன் புத்தியை காட்டி விட்டது. அதாவது தற்போது ரவீனா நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்.

Also read: வெளியேறப் போகும் 2 பேர், ஃபினாலே டிக்கெட் யாருக்கு.? இறுதி கட்ட பரபரப்பில் பிக்பாஸ் வீடு

இது நிச்சயம் அதிர்ச்சியான செய்திதான். ஏனென்றால் மாயா, நிக்சன் இருவரை விட ரவீனாவுக்கு அதிக ஓட்டுகள் கிடைத்திருந்தது. ஆனாலும் கமலுக்காக பிக் பாஸ் டீம் மற்றும் விஜய் டிவி சேர்ந்து இப்படி ஒரு ஓரவஞ்சனை செய்திருக்கிறது.

voting-biggboss
voting-biggboss

அதன்படி பலியாடாக மாறிய ரவீனா நிகழ்ச்சியை விட்டு வெளியேறியுள்ளார். மேலும் இந்த வாரம் முழுவதும் சிறப்பாக டிக்கெட் டு பினாலே டாஸ்க்கில் இவர் விளையாடினார். இருந்தாலும் இவரை சேனல் தரப்பு வெளியேற்றி இருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது.

Also read: ஃபினாலே டிக்கெட்டுக்கு நடக்கும் போட்டா போட்டி.. வாய்ச்சவடால் பேசி கோட்டை விட்ட மாயா, தட்டி தூக்கிய பூமர்