வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

முகமூடி கிழிந்து வெளியேறப் போகும் டம்மி ஹீரோ.. பிக்பாஸ் 8 ஓட்டிங் நிலவரம்

Biggboss 8 Voting: பிக்பாஸ் நிகழ்ச்சி சண்டையும் சச்சரவுமாக இரண்டாவது வாரம் சூடு பிடித்திருக்கிறது. முதல் வாரத்தில் பெரிய அளவு சம்பவம் என்று பார்த்தால் அது ரவீந்தர் செய்த பிராங்க் தான். அது பெரும் கன்டன்ட்டாக மாறிய நிலையில் இந்த வாரம் சிறு சிறு பஞ்சாயத்து தான் நடந்து வருகிறது.

voting-bb8
voting-bb8

இதில் இந்த வாரம் யார் வெளியேற போகிறார் என்ற கேள்வியும் இருக்கிறது. அதன்படி தற்போது நாமினேஷன் லிஸ்டில் பத்து பேர் இருக்கின்றனர். அதில் யார் எவ்வளவு ஓட்டுக்களை வாங்கி இருக்கிறார்கள் என்பதை பற்றி பார்ப்போம்.

தற்போதைய ரிப்போர்ட் படி கடந்த வாரம் போல இந்த வாரமும் சௌந்தர்யா தான் முதலிடத்தை பிடித்துள்ளார். அவருக்கு 20 சதவீத ஓட்டுகள் கிடைத்துள்ள நிலையில் அடுத்த இடத்தில் விஷால் 18.24% வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.

அடுத்ததாக முத்துக்குமரன் 14.85 சதவீத வாக்குகளும் ரஞ்சித் 9.1% வாக்குகளும் பெற்றுள்ளனர். மேலும் தீபக் 8.8.7 சதவீத வாக்குகளும் ஜாக்லின் 8.19 சதவீத வாக்குகளையும் கைப்பற்றியுள்ளனர்.

இந்த வாரம் வெளியேற போகும் போட்டியாளர்

இவர்களுக்கு அடுத்தபடியாக சாச்சனாவுக்கு 7.91 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளது. கடைசி மூன்று இடத்தை ஜெஃப்ரி, தர்ஷா குப்தா, அர்னவ் ஆகியோர் பிடித்துள்ளனர். இதில் அர்னவ் 6134 ஓட்டுக்களை பெற்று இறுதி நிலையில் உள்ளார்.

ஏற்கனவே இவர் ஒரு ஃபேக் என ரவீந்தர் குறிப்பிட்டிருந்தார். பிக் பாஸ் வீட்டுக்குள் இவருடைய நடவடிக்கையும் அப்படித்தான் இருந்தது. ஹீரோயிசம் என்ற பெயரில் ஏதோ ஒன்றை முயற்சித்து வருகிறார்.

ஆனால் அது அனைத்தும் போலியானது என பார்வையாளர்களுக்கு தெரிகிறது. இதுவே அவருக்கு தற்போது கிடைத்துள்ள குறைவான வாக்குகளுக்கு காரணம். அதன்படி டம்மி ஹீரோவான இவர் தன்னுடைய முகமூடி கிழிந்து இந்த வாரம் விஜய் சேதுபதியால் வெளியேற்றப்படுவார்.

- Advertisement -

Trending News