விஜயகாந்துக்கு கொடுக்கப்படாத அந்த விருது.. மறைந்த பின்னும் அலைக்கழிக்கப்படும் கேப்டன்

Actor Vijayakanth: கேப்டன் விஜயகாந்த் கடந்த வருட இறுதியில் உடல்நல குறைவினால் உயிர் நீத்தார். அவருக்கு ஒட்டுமொத்த மக்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.

இப்போதும் கூட அவரை நல்லடக்கம் செய்த இடத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்துகின்றனர். அந்த அளவுக்கு அவருடைய மறைவு ஏற்றுக் கொள்ள முடியாததாக இருக்கிறது.

இந்நிலையில் மத்திய அரசு சொன்ன வாக்கை காப்பாற்றவில்லை என கேப்டன் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர். அதாவது விஜயகாந்த் இறந்த சமயத்தில் அவருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

தாமதமாகும் பத்மபூஷன் விருது

அதன்படி நேற்று டெல்லியில் இதன் விழா ஆரம்பமாகியுள்ளது. அதில் பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அந்த நிகழ்வில் விஜயகாந்துக்கு விருது வழங்கப்படவில்லை.

இது குறித்து கேள்வி எழுந்த நிலையில் மத்திய அரசு அடுத்த கட்ட விழாவில் விருது வழங்கப்படும் என விளக்கம் கொடுத்துள்ளது. ஆனாலும் கேப்டன் ரசிகர்கள் இது குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கேப்டன் இறந்த சமயத்தில் அனுதாபத்தை பெறுவதற்காக அறிவித்தீர்களா? அல்லது தேமுதிக ஆளும் கட்சியுடன் கூட்டணி அமைக்காததால் தாமதிக்கிறீர்களா? என கேட்டு வருகின்றனர்.

இது பரபரப்பாகும் நிலையில் நிச்சயம் கேப்டனுக்கு விருது வழங்கப்படும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அவர் உயிருடன் இருந்தபோது கிடைத்திருந்தால் இன்னும் சந்தோஷமாக இருந்திருக்கும்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்