விஜய் சேதுபதி வரிசையில் அடுத்த நடிகர்.. சத்தமில்லாமல் நடிக்கும் ஒரு டஜன் படம்

தற்போதைய தமிழ் சினிமாவில் படுபிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் யார் என்று கேட்டால் அது விஜய் சேதுபதி மட்டும்தான். இவர் சலிக்காமல் ஒரு வருடத்தில் 18 முதல் 20 படங்கள் வரை நடித்து அசத்தி விடுவார். சினிமாவில் எந்த முன்னணி நடிகரும் இத்தனை திரைப்படங்களில் நடித்தது கிடையாது.

மேலும் இவர் ஹீரோவாக நடிப்பது மட்டுமல்லாமல் வில்லன், குணச்சித்திரம் போன்ற எந்த கேரக்டராக இருந்தாலும் பட்டையை கிளப்புவார். அதுபோக கெஸ்ட் ரோலில் கூட சில திரைப்படங்களில் நடித்து நமக்கு காட்சி கொடுப்பார். இதனால்தான் இவருக்கு ஏராளமான திரைப்படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.

அந்த வரிசையில் தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கும் ஜோ மல்லூரியும் இணைந்திருக்கிறார். இவர் வேறு யாருமல்ல விக்ரம் பிரபு, லக்ஷ்மி மேனன் இணைந்து நடித்த கும்கி திரைப்படத்தில் ஹீரோயினுக்கு அப்பாவாக நடித்திருப்பவர் தான்.

அந்தத் திரைப்படத்திற்கு பிறகு இவர் தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரங்களுக்கு அதிகமாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த வரிசையில் இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜில்லா, காக்கா முட்டை, புலி போன்ற பல திரைப்படங்களில் பல முக்கிய கேரக்டர்களில் நடித்து இருக்கிறார்.

எந்த கேரக்டராக இருந்தாலும் அதை நடித்து அசத்தும் தகுதியும், திறமையும் கொண்ட இவரை சமீபகாலமாக எந்த திரைப்படங்களிலும் அதிகமாகக் காணமுடிவதில்லை. இதனால் அவர் சினிமாவை விட்டு விலகி விட்டாரா என்ற ஒரு கருத்தும் நிலவி வந்தது.

ஆனால் அப்படியெல்லாம் இல்லை என்று அவர் மீண்டும் திரைப்படங்களில் பயங்கர பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது இவர் கைவசம் மட்டும் ஒரு டஜன் படங்கள் வைத்திருக்கிறார். அதில் ஆர்ஜே பாலாஜி, சசிகுமார் போன்ற நடிகர்களுடன் நடித்து வரும் இவர் அஜித் நடிக்கும் திரைப்படத்திலும் நடிக்க இருக்கிறார்.