இந்தியாவின் குடியரசு தலைவராகிறார் ரஜினிகாந்த்..? அடேங்கப்பா இது நம்ம லிஸ்ட்லே இல்லயே..?

அடேங்கப்பா இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே என்பது போல இந்தியாவின் அடுத்த குடியரசு தலைவர் பட்டியலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பெயர் இடம் பெற்றிருப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா அரசியலை குறிவைக்கும் பாஜக அரசு மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு குடியரசுத் தலைவர் பதவியை ஒதுக்க நினைத்து அதை ரஜினிக்கு ஒதுக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த தகவலை அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி கூறி அதிர வைத்து இருக்கிறார்.

இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் இந்த ஆண்டு ஜூலை மாதம் வரை இருக்கிறது. தற்போதுள்ள மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை பார்த்தால் பாஜக மாஸான அதிகாரத்தில் இருக்கிறது. பாஜக கை காட்டும் ஆள் தான் குடியரசு தலைவர் என்பதில் சந்தேகமே இல்லை.

இந்த நேரத்தில் அடுத்த குடியரசு தலைவர் யார் என்பது தான் டெல்லி பாஜக அலுவலகத்தின் ஹாட் டாபிக் ஆக இருக்கிறது. உத்தரப்பிரதேசம் உட்பட வட மாநிலங்களில் நடக்கும் சட்டசபை தேர்தல் முடிந்த கையோடு குடியரசு தலைவர் யார் என்பதை முடிவு செய்யும் வேலையில் இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இசுலாமியர் ஒருவரை நியமித்தால் சிறுபான்மை வாக்குகளை இந்தியாவில் அள்ளி விடலாம் என்று அப்துல்கலாம் அய்யாவை குடியரசு தலைவராக ஆதரவு அளித்தது போல தற்போது அந்த ஐடியாவில் பல இஸ்லாமிய தலைவர்களின் பெயர்களும் இந்த லிஸ்டில் இருக்கிறதாம்.

இந்த அரசியல் விளையாட்டில் தான் ரஜினியின் பெயரும் அடிபட்டு வருகிறது. ஆனால் பரிசீலனை பட்டியலில் இடம்பெற்றுள்ள ரஜினிக்கு வாய்ப்புகள் குறைவாகவே இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதே பட்டியலில் இருக்கும் தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. முதல்வன் படத்தில் மணிவண்ணன் சொல்வது போல “என்னடா இது குடியரசு தலைவர் பதவில ஒன் டே மேட்ச் ஆடிட்ருக்காங்க” என்றுதான் சொல்ல தோன்றுகிறது.