திருச்சிற்றம்பலம் 100 கோடி பாக்ஸ் ஆபீஸ் வரிசையில் சேருமா.? ஆறே நாளில் வாயை பிளக்க வைத்த வசூல்

தனுஷ் நடிப்பில், மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவான திருச்சிற்றம்பலம் திரைப்படம் கடந்த 18ஆம் தேதி திரையில் ரிலீஸ் ஆனது. இந்த படத்தின் வசூலானது இன்னும் ஓரிரு நாட்களிலில் 50 கோடி வசூலை எட்ட உள்ளது.

இந்த படத்தின் கதை இதற்கு முன்னாள் வெளிவந்த ஒரு சில படங்களின் சாயலில் இருப்பதாக கூறினாலும், தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்களின் நடிப்பு ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து போயிற்று. இதனாலேயே படத்தை தியேட்டர்களில் கொண்டாடி கொண்டிருக்கிறார்கள்.

Also Read : தனுஷ் தேர்ந்தெடுத்த 3 நடிகைகள்.. கடைசி நேரத்தில் மாற்றியதால் தப்பித்த திருச்சிற்றம்பலம்

தனுஷ், நித்யா மேனன், பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் கூட்டணி ஒருவரை ஒருவர் நடிப்பில் போட்டிபோட்டு வெற்றி கண்டு விட்டார்கள் என்றே சொல்லலாம். கருத்து, சமுதாய எழுச்சி, சாதிய பாகுபாடென தமிழ் சினிமா ஒரு பாதையில் பயணித்து கொண்டிருக்கும் போது சட்டென ஸ்பீட் பிரேக்கர் போட்டது போல் திருச்சிற்றம்பலம் வந்து இருக்கிறது.

அசுரன், கர்ணன் என சீரியஸான முகங்களை காட்டிக் கொண்டிருந்த தனுஷின் பழைய படங்களான பொல்லாதவன், படிக்காதவன், யாரடி நீ மோஹினி என்ற ஜாலியான கதைகளை நினைவூட்டும் விதமாக திருச்சிற்றம்பலம் இருக்கிறது. இந்த படத்தின் கேரக்டர் செலக்சன் தான் இதன் மிகப்பெரிய வெற்றி என அடித்து சொல்லலாம்.

Also Read : மீண்டும் ஒன்று சேர்ந்த தனுஷ், ஐஸ்வர்யாவின் புகைப்படம்.. விவாகரத்துன்னு சொன்னதெல்லாம்

படம் ரிலீசான முதல் நாளிலேயே 9.52 கோடி வசூலை அள்ளி விட்டது. அதனை தொடர்ந்து வந்த பாசிட்டிவ் விமர்சனங்களால் இரண்டாம் நாள் 8.79 கோடி, மூன்றாம் நாள் 10.24 கோடி, நான்காம் நாள் 11.03 கோடி, ஐந்தாம் நாள் 4.16 கோடி என வசூல் வேட்டை செய்து வருகிறது.

இந்த படம் 40 கோடி பட்ஜெட்டில் உருவானது. தற்போது ஐந்து நாள் வசூல் 43.74 கோடி. இன்னும் ஓரிரு நாட்களில் 50 கோடியை நெருங்க உள்ளது. திருச்சிற்றம்பலம் படமும் விரைவில் 50 கோடி வசூல் கிளப்பில் சேர இருக்கிறது. அனேகனுக்கு பிறகு தனுஷின் 50 கோடி வசூல் திரைப்படம் இதுவாகும்.

Also Read : விஜய்க்கும் சேர்த்து கட்டளையிட்ட இயக்குனர்.. அவஸ்தையில் வாரிசு படக்குழு

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்