ஜெயலலிதாவை வேவு பார்க்க வந்த தில்லாலங்கடி லேடி.. நம்பிக்கை இல்லாமல் எம்ஜிஆர் செய்த வேலை

MGR-Jayalalitha: தமிழக அரசியல் வரலாற்றை கொஞ்சம் திரும்பி பார்த்தால் ஜெயலலிதா, எம்ஜிஆர் இருவருக்குமே மிகப்பெரிய பங்கு இருக்கிறது. அதிலும் ஜெயலலிதா இரும்பு பெண்மணி என்ற அடையாளத்துடன் ஆட்சி செய்து வந்தார். அப்படிப்பட்டவரை வேவு பார்க்க எம்ஜிஆர் ஒரு தில்லாலங்கடியான ஆளை அனுப்பி இருக்கிறார்.

அதாவது எம்ஜிஆர் முதலமைச்சராக பிசியாக இருந்து வந்த காலகட்டத்தில் ஜெயலலிதா என்ன செய்கிறார் என்பதை கவனிக்க முடியாமல் இருந்திருக்கிறார். அதனாலேயே ஒரு பயமும் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. ஏனென்றால் எம்ஜிஆரின் கட்சியில் நிறைய பேர் இருந்திருக்கிறார்கள்.

Also read: ஜெயலலிதா கடைசியாக ஜோடி போட்ட நடிகர்.. இன்று உயிரை விட்ட பரிதாபம்

ஆனால் ஜெயலலிதா ஒரு சிறு கூட்டம் போட்டாலும் மக்கள் அலைகடலென திரண்டு வந்தனர். இது கட்சிக்காக வழக்கமாக வரும் கூட்டம் கிடையாது. அதேபோல் ஜெயலலிதா பலரும் மிரளும் அளவுக்கு ஆதிக்க குணம் கொண்டவர் என்பது எம்ஜிஆருக்கு தெரியும். அதன் காரணமாகவே அவரை வேவு பார்க்க வீடியோக் கடை நடத்தி வந்த சசிகலா என்பவரை ஏற்பாடு செய்திருக்கிறார்.

அப்படி உள்ளே வந்தவர் தான் சசிகலா. ஆனால் சாதாரண ஆளாக வந்த அவர் பின்னாளில் ஜெயலலிதாவின் முழு நம்பிக்கைகுரிய ஆளாக மாறினார் என்பது அனைவருக்கும் தெரியும். இன்னும் சொல்லப்போனால் உடன்பிறவா சகோதரி என்றும் நெருக்கமான தோழி என்றும் ஜெயலலிதா கூறும் அளவுக்கு அவர் ஒன்றிப்போனார்.

Also read: பிரம்மாண்ட நிறுவனம் உருவாக்கிய 5 முதல்வர்கள்.. ஜெயலலிதாவுடன் முடிந்ததை விஜய் தொடுவாரா.!

மேலும் ஜெயலலிதா முதல்வராக ஒரு அங்கீகாரத்தை பிடிப்பதற்கும் இவர் மறைமுக காரணம் என்று கூட சொல்லலாம். எம்ஜிஆர் இப்பொழுது இருந்திருந்தால் சாதாரணமாக இருந்த சசிகலாவா இது என்று நிச்சயம் வியந்திருப்பார். அந்த அளவுக்கு நுணுக்கமான பல விஷயங்களை கையாண்டு ஜெயலலிதாவுக்கு ஆலோசகராகவும் இவர் இருந்திருக்கிறார்.

அந்த வகையில் ஜெயலலிதா இருந்த போதும் சரி மறைந்த பிறகும் சரி அவரின் மனதுக்கு நெருக்கமானவராக இருந்த ஒரு நபர் இவர்தான். மேலும் நம்பிக்கை இல்லாமல் எம்ஜிஆர் செய்த ஒரு விஷயம் பல சம்பவங்களுக்கு வித்திட்டது. இப்படி அவரால் வேவு பார்க்க வந்த இவர் பிறகு ஜெயலலிதாவுக்கு எல்லாமுமாக மாறிப்போன கதை பலருக்கும் ஆச்சரியமாக தான் இருக்கிறது.

Also read: ஜெயலலிதாவை கழட்டி விட்ட எம்ஜிஆர்.. பிரிவுக்கு காரணமாக இருந்த இரண்டு நடிகைகள்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்