விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் வாரிசு. வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. வாரிசு படத்திற்கு பிறகு விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
விஜய், நடிகர் கமலஹாசனை பற்றி சில விஷயங்களை வெளிப்படையாக பேசினார். அதாவது ஒருமுறை விஜய்யிடம் நீங்கள் பொறாமைப்பட கூடிய ஒரு நடிகர் என்றால் அது யாராக இருக்கும் என கேட்டனர். அதற்கு கொஞ்சமும் யோசிக்காமல் விஜய், நடிகர் கமலஹாசன் நினைத்துதான் பொறாமைப்படுவது சிரிப்புடன் கூறினார்.
மேலும் அவர் மாதிரி யாராலும் நடிக்க முடியாது. கண்கள் உட்பட அனைத்து விதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அதனை பார்க்கும் போது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. மேலும் கமலஹாசன் அவர்களைப்போல் நாமும் பல கதாபாத்திரம் நடிக்க வேண்டும் என்று ஆசை இருந்ததாகவும் கூறினார்.
மேலும் சினிமா துறையில் உங்களுக்கு போட்டியாக இருப்பவர்கள் யார் என்று கேட்கப்பட்டதற்கு நடிகர் விஜய், ‘மக்கள் மனதில் எந்த படம் அதிகம் இடம்பெறுகிறதோ அந்தப் படங்களின் நடிகர்கள் அனைவரும் எனக்கு ஒரு போட்டி மாதிரியாக தான் நினைப்பேன்’ எனக் கூறினார்.
மேலும் ஒருவருடைய பலம் பலவீனம் எப்படி நீங்கள் கண்டுபிடிப்பதில் என கேட்கப்பட்டதற்கு விஜய், ‘ஒருவரின் பலவீனம் நமக்கு தெரிந்து விட்டால், அது நமக்கு பணம். ஒருத்தருடைய பலம் நமக்கு தெரியாமல் இருந்து விட்டால் அதுவே நமக்கு பலவீனமாகி விடும்’ என்று சாமர்த்தியமாக கூறினார்.
பெரும்பாலும் மேடை மற்றும் ஊடகங்களில் பேசும்போது தளபதி விஜயின் பேச்சு ரசிகர்களை கவரும் விதத்தில் இருப்பதுடன் அவர்களை சிந்திக்கவும் தூண்டும். அப்படித்தான் இந்த பேட்டியிலும் அவர் வெளிப்படையாகப் பேசி இருப்பது அவருடைய ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.