ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

கேமராவை மறந்து விஷத்தை கக்கும் 2 வெத்து வேட்டு.. பிக்பாஸ் வீட்டில் தேவையில்லாத ஆணிகளின் அட்டகாசம்

Biggboss 7: பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு நாள் காரசாரமாகவும் ஒரு நாள் சுவாரஸ்யமாகவும் சென்று கொண்டிருக்கிறது. ஒவ்வொருவரும் ப்ரோமோவில் இடம் பிடிப்பதற்காக நீ நான் என போட்டி போட்டு கன்டென்ட் கொடுத்து வருகின்றனர். ஆனால் அதுக்கும் எங்களுக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல் இரண்டு போட்டியாளர்கள் வீட்டை சுற்றி வருகின்றனர்.

ஆரம்பத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இப்போது வெத்துவேட்டு என சொல்லும் அளவுக்கு முன்னேறி இருக்கின்றனர் மாயா மற்றும் பூர்ணிமா இருவரும். முதலில் இருந்தே ஓரமாக உட்கார்ந்து தாய்க்கிழவிகள் போல் புறணி பேசும் இவர்கள் எதற்கு வந்தோம் என்பதையே மறந்து விட்டு பொழுதை போக்கிக் கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில் நேற்றைய எபிசோடில் யார் நாமினேட் ஆவார்கள். யாருக்கு எத்தனை ஓட்டு கிடைக்கும் என்பதை பற்றி இருவரும் புலம்பி கொண்டிருந்தனர். அது மட்டுமல்லாமல் மாயா தனக்கு இந்த கேமே புரியவில்லை என தலையை சொரிந்து கொண்டிருந்தார். வந்த நாளிலிருந்து யார் மீதாவது வன்மத்தை காட்டுவதை மட்டும் தான் இவர்கள் இருவரும் ஒரு வேலையாக செய்து கொண்டிருக்கின்றனர்.

அதனாலேயே ரசிகர்கள் இவர்களை விஷ பாட்டில்கள் என்று செல்லப்பெயர் வைத்து கூப்பிடுகின்றனர். அந்த அளவுக்கு வெறுப்பை சம்பாதித்து இருக்கும் இருவரும் இன்னும் விளையாட்டைப் பற்றிய புரிதல் இல்லாமல் யார் கிடைப்பா எப்போது வம்பு இழுக்கலாம் என்ற நோக்கோடு சுற்றி வருகின்றனர்.

அதிலும் மாயா, நிக்சன் எல்லாம் பயங்கரமா விளையாடுவார் என்று நினைத்தேன் என்று சொல்லிக் கொண்டிருந்தார். உடனே பூர்ணிமா அவன் ஒரு சென்டிமென்ட் முட்டாள் என்று கலாய்த்து தள்ளினார். இதை பார்த்த ரசிகர்கள் இந்த ரெண்டு அரை டிக்கெட்டும் முதலில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று கமெண்ட் கொடுத்து வருகின்றனர்.

அந்த அளவுக்கு இவர்கள் இருவரும் பிக் பாஸ் வீட்டில் தேவையில்லாத ஆணிகளாக இருந்து சில சமயங்களில் விதிமீறலையும் செய்கின்றனர். அந்த வகையில் கடந்த வாரம் பிரதீப் காப்பாற்றப்பட்ட போது ரசிகர்கள் கரகோஷங்களை எழுப்பி மாயாவுக்கு நோஸ்கட் கொடுத்தனர். அதேபோன்று இனிவரும் நாட்களிலும் ஆண்டவர் கையால் இவர்கள் குட்டுப்பட போவது உறுதி.

- Advertisement -

Trending News