4 முறையாக தொடரும் அஜித்- திரிஷாவிற்கான சென்டிமென்ட்.. விடாமுயற்சியிலாவது மாற்றுவாரா மகிழ்திருமேனி?

Ajith-Trisha: துணிவு படத்திற்கு பிறகு அஜித் அடுத்த படமான விடாமுயற்சி படத்தின் சூட்டிங் மீண்டும் அஜர்பைசானில் துவங்கி இருக்கிறது. இதில் அஜித்- திரிஷா ஜோடி ஐந்தாவது முறையாக இணைந்துள்ளனர். இதற்கு முன்பு இந்த எவர்கிரீன் ஜோடி ஜி, கிரீடம், மங்காத்தா, என்னை அறிந்தால் போன்ற படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

ஆனால் ஒரு படத்தில் கூட அவர்கள் இருவரும் கிளைமாக்ஸில் இணைவதாக கதை அமையவில்லை. ஆனா இப்போது விடாமுயற்சி படத்தில் 5-வது முறையாக இணைந்து இருக்கும் இந்த ஜோடியை படத்தின் இயக்குனர் மகிழ்திருமேனி கிளைமாக்ஸில் இணைக்க வேண்டும் என்பது தான் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பு.

இதற்கு முன்பு இவர்கள் நடித்த படங்களில் எல்லாம் தொடக்கத்தில் காதலிப்பதாக மட்டுமே பார்க்க முடிந்தது. கடைசியில் இவர்கள் இணைவது போல் காட்டவே மாட்டார்கள். இது ஒரு செண்டிமெண்டாகவே தொடர்கிறது. இது விடாமுயற்சியில் நடக்கவே கூடாது.

Also read: சூர்யாவின் சினிமா வாழ்க்கை முடிய போகிறது.. அதிர்ச்சி தகவலை சொன்ன அஜித்தின் நண்பர்

விடாமுயற்சி படத்திலாவது இது நடக்குமா?.

இந்த முறையாவது அஜித்- திரிஷா இருவரையும் ஹாப்பி எண்டுடன் பார்க்க வேண்டும் என தல ரசிகர்கள் ஆசைப்படுகின்றனர். இதனால் இந்த விஷயத்தை ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கின்றனர். விடாமுயற்சி படத்தில் திரிஷா மட்டுமல்ல பிரியா பவானி சங்கர், ரெஜினா, அர்ஜுன் உள்ளிட்ட பிரபலங்கள் இணைந்து நடிக்கின்றனர்.

கடந்த மாதம் முதல் கட்ட படப்பிடிப்பு அஜர்பைசானில் நிறைவடைந்த நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பும் அங்குதான் நடக்கிறது. பக்கா ஆக்சன், திரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். விடாமுயற்சி படத்தில் ரசிகர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பது இப்போது தெரிந்து விட்டது. அதை மகிழ்திருமேனி நிறைவேற்றுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Also read: ஷாலினிக்காக அஜித் கொடுத்த வரதட்சணை.. தப்பா எடை போட்ட மாமனாருக்கு வைத்த செக்