ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

90ஸ் கிட்ஸ்களை உச்சா போக வைத்த 5 வில்லன்கள்.. பூச்சாண்டியாக பயமுறுத்திய ஜண்டா

பொதுவாக வில்லன் கேரக்டர் என்றாலே உடல் மொழி, குரல், பார்வை போன்ற அனைத்திலும் ரசிகர்களை மிரட்டும் படியாக இருக்கும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் வரும் வில்லன்கள் அமுல் பேபி, சாக்லேட் பாய் போன்று காட்டப்படுகிறார்கள். அதிலும் பணக்கார தோரணையில் கோட் சூட்டுடன் வரும் வில்லன்களை தான் நாம் அதிகம் பார்க்கிறோம்.

ஆனால் 90 காலகட்டத்தில் திரைப்படங்களில் வரும் வில்லன்களை பார்த்தாலே குழந்தைகள் பலரும் அரண்டு தான் போவார்கள். அதிலும் சில தாய்மார்கள் பூச்சாண்டி என சில வில்லன்களை காண்பித்து குழந்தைகளுக்கு சோறு ஊட்டிய கதைகளும் இருக்கிறது. அப்படி குழந்தைகளை பயத்தில் உச்சா போக வைத்த ஐந்து வில்லன்களை பற்றி இங்கு காண்போம்.

Also read: குணச்சித்திர கேரக்டரில் வெற்றி கண்ட 6 நடிகர்கள்.. ஹீரோவையே மிஞ்சும் காளி வெங்கட்

ராமி ரெட்டி இவரை கண்டு பயப்படாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அம்மன் திரைப்படத்தில் வில்லனாக நடித்திருக்கும் இவர் மொட்டை தலையுடன் மந்திரங்கள் ஓதுவதை பார்க்கும் போதே மிரட்சியாக இருக்கும். அதிலும் ஜண்டா என கர்ண கொடூர குரலில் இவர் பேசுவது பெரியவர்களையே பயப்பட வைக்கும்.

மேலும் இவர் வரும் காட்சிகளில் எல்லாம் பின்னால் பயங்கர சிரிப்பொலி ஒன்றும் கேட்கும். இப்பொழுது டெக்னாலஜிகள் வளர்ந்து விட்டாலும் அந்த காலகட்டத்தில் தன் உருவத்தை காட்டியே அனைவரையும் பூச்சாண்டி என மிரள வைத்த பெருமை இவருக்கு உண்டு.

சுரேஷ் கிருஷ்ணா பொட்டு அம்மன் என்ற திரைப்படத்தில் படு பயங்கர வில்லனாக மிரட்டி இருப்பார். பிரம்மாண்ட உடலும், அசுரத்தனமாக வில்லத்தனமும் என இவரை பார்த்தாலே குழந்தைகள் அனைவரும் கண்ணை மூடி கொள்வார்கள். அந்த அளவுக்கு இவருடைய உருவம் பெரியவர்களையே பயம் கொள்ள வைக்கும் அளவுக்கு இருந்தது. அந்த வகையில் இப்போதும் கூட இவரை பார்த்து பயந்த நினைவுகள் 90ஸ் குழந்தைகளால் மறக்க முடியாததாக இருக்கிறது.

ஆனந்தராஜ் இப்போது காமெடி கதாபாத்திரங்களில் கலக்கிக் கொண்டிருந்தாலும் ஒரு காலத்தில் இவரை பார்த்தாலே பயமாக இருக்கும். ஏனென்றால் இவர் நடிக்கும் படத்தில் எல்லாம் பெண்களை கடத்தி செல்வது, தவறாக நடந்து கொள்வது என கொடூரமான வில்லனாக நடித்திருப்பார். அதிலும் மாநகர காவல் என்ற திரைப்படத்தில் இவர் மொட்டை தலையில் இருக்கும் வில்லன் லுக் அப்போதிருக்கும் குழந்தைகளை ரொம்பவும் பயம் காட்டியது குறிப்பிடத்தக்கது.

Also read: கவுண்டமணி பெஸ்ட் சக்ஸஸ்ஃபுல் 5 ஹீரோக்கள்.. செந்திலுக்கே டஃப் கொடுத்த சத்யராஜ்

பொன்னம்பலம் அந்த காலகட்டத்தில் மிகவும் பிரபலமான வில்லன்களில் இவர் முக்கியமானவர். முன்னணி ஹீரோக்கள் பலருக்கும் வில்லனாக நடித்திருக்கும் இவரை பார்த்தாலே பயமாக இருக்கும். அந்த அளவுக்கு இவர் பெரிய உடலுடன், முகத்தில் கொடூரமான வில்லத்தனம் காட்டுபவராக நடித்திருப்பார். அதிலும் முத்து திரைப்படத்தில் இவர் தலையை ஒரு மாதிரி ஆட்டிக்கொண்டு செய்யும் வில்லத்தனம் குழந்தைகளை பயப்பட வைக்கும் வகையில் இருந்தது.

மன்சூர் அலிகான் நிஜ வாழ்வில் எதார்த்தமான மனிதராக இவர் இருந்தாலும் திரைப்படங்களில் கொடூரமான வில்லனாகவே இவர் காட்டப்பட்டிருக்கிறார். அதிலும் பெண்கள் விஷயத்தில் இவர் ரொம்பவும் மோசமான வில்லனாக நடித்திருப்பார். பார்க்கும் பெண்களை எல்லாம் தூக்கி சென்று தவறாக நடந்து கொள்ளும் வேலையை தான் இவர் பெரும்பாலான படங்களில் செய்வார். அந்த அளவுக்கு மோசமான வில்லனாக நடித்திருக்கும் இவரை நிஜத்தில் பார்த்தாலே பயந்து மிரண்டு போன குழந்தைகளும் அப்போது இருந்தார்கள்.

இவ்வாறு இந்த ஐந்து வில்லன் நடிகர்களும் அந்த காலகட்டத்தில் தங்கள் நடிப்பால் அனைவரையும் மிரட்டி இருக்கிறார்கள். அதிலும் குழந்தைகளும், தாய்மார்களும் இவர்களை வெறுப்புணர்வோடு பார்த்த கதையும் உண்டு. அந்த வகையில் இப்போது இருக்கும் வில்லன் நடிகர்களுக்கு இவர்கள் தான் முன்னோடியாக இருக்கின்றனர்.

Also read: காமெடி கதாபாத்திரத்தில் பட்டையை கிளப்பிய 5 நடிகைகள்.. சந்தானத்தின் காதலியாக மாஸ் காட்டிய ஜாங்கிரி

- Advertisement -

Trending News