புது படமா அப்ப அந்த 5 ஹீரோயின் கிட்ட பேசுங்க.. தயாரிப்பாளர்களை தெறிக்கவிடும் ஹீரோக்கள்

தமிழ் திரையுலகில் தற்போது புது புது இளம் நாயகிகளின் வரவு அதிகமாகி விட்டது. அதில் சில குறிப்பிட்ட ஹீரோயின்கள் ரசிகர்களின் கனவு கன்னியாக மாறிவிட்டனர். அதனால் முன்னணி ஹீரோக்கள் பலரும் தங்கள் படங்களில் அந்த இளம் நடிகைகளை தான் ஹீரோயினாக போட வேண்டும் என்று தயாரிப்பாளர்களிடம் கூறி வருகின்றனர்.

அதனால் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் ஹீரோக்கள் கூறும் நடிகைகளை தங்கள் படங்களில் புக் செய்வதற்கு படாத பாடு பட்டு வருகின்றனர். அந்த வகையில் ஹீரோக்களின் சாய்ஸாக இருக்கும் ஐந்து இளம் நாயகிகளை பற்றி இங்கு காண்போம்.

பிரியங்கா மோகன்: தமிழில் டாக்டர் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமான இவர் அதைத் தொடர்ந்து டான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஹீரோயினாக இருக்கும் இவருக்கு தமிழில் ஏகப்பட்ட மவுசு இருக்கிறது. அந்த வகையில் இவரை தங்கள் படங்களில் நடிக்க வைக்க பல ஹீரோக்கள் விரும்புகின்றனர்.

கீர்த்தி ஷெட்டி: தெலுங்கு திரை உலகில் மிகவும் பிரபலமாக இருக்கும் இவர் தற்போது தமிழிலும் அறிமுகமாக இருக்கிறார். பாலாவின் இயக்கத்தில் சூர்யா நடித்து கொண்டிருக்கும் திரைப்படத்தில் கீர்த்தி செட்டி ஹீரோயினாக நடித்து வருகிறார். இன்னும் சில முன்னணி நடிகர்களும் இவரை தங்கள் படங்களில் ஹீரோயின் ஆக புக் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கியாரா அத்வானி: பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வரும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் இவரை தமிழ் திரையுலகில் நடிக்க வைக்கவும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. மேலும் சில தமிழ் ஹீரோக்களும் இவருடன் இணைந்து நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பூஜா ஹெக்டே: பீஸ்ட் திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட இவருக்கு தற்போது தமிழில் பல பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. ஹிந்தி, தெலுங்கு என்று பயங்கர பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் இவரின் கால்ஷூட்டை பெறுவதற்கு தற்போது பல தயாரிப்பாளர்களும் போட்டி போட்டு வருகின்றனர்.

சாய் பல்லவி: அற்புதமான நடிப்பும், நடனத் திறமையும் கொண்ட இவர் தற்போது தென்னிந்திய மொழிகளில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் இவருக்கு தமிழில் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இதனால் இவரை ஹீரோயினாக புக் செய்யச் சொல்லி பல ஹீரோக்கள் தயாரிப்பாளர்களை வற்புறுத்தி வருகின்றனர்.

Stay Connected

1,170,257FansLike
132,059FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -