வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

முதல் நாளிலேயே அதிக வெறுப்புக்கு ஆளான 5 போட்டியாளர்கள்.. விஜய் சேதுபதியிடம் மொக்கை வாங்கிய ஆணழகன்

Biggboss 8: பிக்பாஸ் சீசன் 8 ஆரம்பிச்சாச்சு இனிமே சோசியல் மீடியாக்கள் ரணகளமாகத்தான் இருக்கும். வரப்போகும் நூறு நாட்களும் சண்டை சச்சரவு என போர் அடிக்காமல் நகரும். ஏனென்றால் இந்த முறை விஜய் டிவியின் 11 வாரிசுகள் பங்கேற்றுள்ளனர்.

தலையாட்டி பொம்மை போல் சேனல் சொல்லும் அத்தனையையும் அவர்கள் செய்வார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. இதை மற்ற போட்டியாளர்கள் எப்படி சமாளிப்பார்கள் என்பதுதான் ட்விஸ்ட்.

அதன்படி இப்போது 18 போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். அதில் சிலரை பார்வையாளர்களுக்கு உடனே பிடித்து விட்டது. சிலரை பார்த்ததுமே பிடிக்காமல் போய்விட்டது. அப்படி முதல் நாளிலேயே ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்த ஐந்து பிரபலங்கள் பற்றி இங்கு காண்போம்.

அர்னவ்: செல்லம்மா சீரியலில் நடித்த இவர் அந்த ஹீரோயின் உடன் உறவில் இருப்பதாக அவர் மனைவி புகார் தெரிவித்து இருந்தார். இது பெரும் பிரச்சனையாக மாறிய நிலையில் போட்டியாளராக இவர் பிக் பாஸ் வீட்டுக்கு வந்திருக்கிறார்.

வந்த முதல் நாளிலேயே மேடையில் விஜய் சேதுபதியிடம் ஆணழகன் ரேஞ்சுக்கு ஓவர் திமிராக பேசினார். ஆனால் அவரோ உனக்கு நான் அப்பன் என சொல்லும் படி அவரை நோஸ்கட் செய்து விட்டார். இப்படி வாயில் சனியோடு உள்ளே நுழைந்திருக்கும் இவரை ரசிகர்கள் ட்ரோல் செய்ய ஆரம்பித்து விட்டனர்.

தர்ஷிகா: விஜய் டிவியில் தென்றல் வந்து என்னை தொடும், பொன்னி ஆகிய சீரியலில் நடித்திருக்கும் இவர் பிக் பாஸ் வீட்டுக்கு வந்திருக்கிறார். வந்த உடனேயே சௌந்தர்யாவின் குரலை பற்றி கமெண்ட் கொடுத்து வம்பில் சிக்கி இருக்கிறார். இதனால் இவரும் வெறுக்கப்படும் போட்டியாளர்களில் ஒருவராக மாறியுள்ளார்.

ஆணழகனுக்கு நோஸ்கட் கொடுத்த விஜய் சேதுபதி

சுனிதா: தமிழை தப்பு தப்பா பேசினா பிரபலமாகி விடலாமா என ஒரு படத்தில் டயலாக் வரும். அதை இவருக்காகவே எழுதி இருப்பார்கள் என்று பல சமயங்களில் தோன்றும். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தப்புத் தப்பாக பேசி காமெடி பண்ணும் இவர் பிக் பாஸ் போட்டியாளராக மாறியுள்ளார்.

ஆனால் மணிமேகலை, பிரியங்கா பிரச்சனையில் இவர் வெளியிட்ட ஒரு வீடியோ பெரும் சர்ச்சையாக மாறியது. அதனாலயே இவருக்கான எதிர்ப்புகளும் கிளம்பியது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் வீட்டுக்குள் வந்திருக்கும் இவர் தற்போது பார்வையாளர்களுக்கு பிடிக்காத ஒரு போட்டியாளராக உள்ளார்.

அன்ஷிதா: செல்லம்மா சீரியலின் ஹீரோயினான இவர் குக் வித் கோமாளியிலும் இடம்பெற்றிருந்தார். இவ பொம்பள ரவுடியாச்சே சகல என சொல்லும் அளவுக்கு இவருடைய பர்பாமன்ஸ் இருந்தது. அப்போதே ரசிகர்கள் இவரை கழுவி ஊற்றுவார்கள்.

அது மட்டும் இன்றி அர்ணவ் உடன் இவர் நெருக்கமாக இருக்கிறார் என்ற தகவலும் சர்ச்சை தான். இப்படி சர்ச்சைகளுக்கு நடுவில் இரண்டு பேருமே பிக் பாஸ் வீட்டுக்கு வந்திருக்கின்றனர். இதனால் நிச்சயம் ஒரு பிரளயம் வெடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

முத்துக்குமரன்: தமிழ் தான் என் மூச்சு என பிக் பாஸ் வீட்டுக்குள் வந்திருக்கும் இவருக்கு ஏற்கனவே சில எதிர்ப்புகள் இருக்கிறது. சோசியல் மீடியாவில் பூமர் போன்ற வார்த்தைகளால் விமர்சிக்கப்படும் இவர் எத்தனை நாள் பிக் பாஸ் வீட்டுக்குள் தாக்கப்பிடிப்பார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பார்வையாளர்களுக்கு பிடிக்காத ஐந்து பிரபலங்கள்

- Advertisement -

Trending News