1000 கோடிக்கு விதை போட்ட இரண்டு ஜாம்பவான்கள்.. ரஜினி, விஜய்யின் பிசினஸுக்கு காரணம் இதுதான்

Rajini-Vijay: இப்போது விஜய், ரஜினி இருவரின் மார்க்கெட்டும் தான் உச்சத்தில் இருக்கிறது. இவர்கள் நடித்தால் போதும் அப்படம் கோடிக்கணக்கில் பிசினஸ் ஆகிவிடும் என்ற நிலையும் இருக்கிறது. சமீபத்தில் வெளிவந்த ஜெயிலர் 600 கோடியை தாண்டி வசூலித்த நிலையில் வர இருக்கும் லியோ ஆயிரம் கோடி தட்டி தூக்கும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.

இப்படி பாலிவுட் ரேஞ்சுக்கு கொடிகட்டி பறக்கும் தமிழ் சினிமாவின் இத்தகைய வளர்ச்சிக்கு காரணமான இரண்டு ஜாம்பவான்களும் இருக்கின்றனர். அதில் முதலாவதாக எம்ஜிஆரை தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் அந்த காலகட்டத்தில் மக்கள் யாரும் பெரிய அளவில் திரையரங்குகளுக்கு வந்து படங்களை பார்ப்பதை விரும்பவில்லை.

ஆனால் அவர்கள் எம்ஜிஆருக்காகவே பணம் செலவு செய்து படம் பார்க்க வந்த மேஜிக்கும் நடந்திருக்கிறது. அதை தொடர்ந்து தான் தமிழ் சினிமாவின் தரம் கொஞ்சம் கொஞ்சமாக உயர தொடங்கி இருக்கிறது. அதை சிவாஜி, ஜெமினி உள்ளிட்ட பல ஜாம்பவான்கள் கட்டி காத்து பெருமை தேடி கொடுத்திருக்கின்றனர்.

அதற்கு அடுத்த காலகட்டம் என்று பார்த்தால் இளையராஜாவின் ஆதிக்கம் தான் நிறைந்திருந்தது. அவருடைய இசைக்காகவே மயங்கிய ரசிகர்களும் உண்டு. அதேபோல் பாடல்களுக்காக ஓடிய படங்களும் இருக்கிறது. அதனாலயே ரஜினி, கமல் உள்ளிட்ட பல டாப் ஹீரோக்கள் இவருக்காக காத்திருந்து படம் பண்ணுவார்கள்.

அதுவரை ரேடியோவில் பாடல்களை கேட்டு வந்த ரசிகர்கள் ஆடியோ கேசட் வாங்குவதிலும் ஆர்வம் காட்டினர். அதன் மூலம் தமிழ் சினிமாவின் வியாபாரமும் லாபத்தை நோக்கி நகரத் தொடங்கியது. இப்படி லட்சங்கள் கோடிகளாகி இன்று டாப் ஹீரோக்களின் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் ருத்ர தாண்டவம் ஆடும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது.

இதற்கு விதை போட்டது இந்த பெரும் புள்ளிகள் தான். அதனாலேயே ரஜினி, விஜய், அஜித், கமல் போன்ற நடிகர்கள் நூறு கோடிகளை தாண்டி சம்பளம் வாங்கும் அளவுக்கு வந்திருக்கின்றனர். அந்த வகையில் இவர்களுடைய படங்களின் பிசினஸ் இதனால் தான் ரிலீசுக்கு முன்பே கல்லா கட்டி ஆயிரம் கோடி வசூலுக்கும் காரணமாக இருக்கிறது.

Next Story

- Advertisement -