நீலாம்பரியாக நடிக்க இருந்த 2 கதாநாயகிகள்.. கேஎஸ் ரவிக்குமார் உடைத்த படையப்பா சீக்ரெட்

சினிமாவை பொருத்தவரை எத்தனையோ பேர் பெரிய ஆர்டிஸ்ட்கள் வில்லன் கதாபாத்திரத்திற்கு நடித்திருந்தாலும் என்றுமே நம்மளால் மறக்க முடியாத அளவிற்கு வில்லத்தனமான நடிப்பை கொடுத்து நம் மனதில் இடத்தைப் பிடித்தவர் நீலாம்பரி என்ற கேரக்டர். எத்தனை காலங்கள் கடந்து இருந்தாலும் இவருடைய கதாபாத்திரம் ரசிகர்களிடம் நிலைத்து இருக்கும்.

அவ்வளவு கச்சிதமாக கதைக்கு ஏற்ற மாதிரி இவரை தவிர வேறு யாரு நடித்து இருந்தாலும் இந்த அளவுக்கு நீலாம்பரி என்ற ஒரு கேரக்டர் நிலைத்து நிற்குமா என்று சந்தேகம்தான். மேலும் இதில் ரஜினிக்கு இணையாக பெயர் பெற்றது இவருடைய கேரக்டர் என்றால் அதற்கு முழுக்க காரணம் ரம்யா கிருஷ்ணனின் நடிப்புதான் என்று சொல்லலாம்.

Also read: ரம்யா கிருஷ்ணன் அந்த இயக்குனரின் இரண்டாவது மனைவியாமே? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!

ஆனால் தற்போது இதைப்பற்றி கே.எஸ் ரவிக்குமார் அளித்த ஒரு பேட்டியில் ரஜினிக்கு எதிரியான நீலாம்பரி கேரக்டருக்கு முதலில் இவரை தேர்வு செய்யவில்லை. இவருக்கு முன்பு இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பதற்கு இரண்டு நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றிருக்கிறது. அதில் ஒன்று மீனா, இவரிடம் கே எஸ் ரவிக்குமார் இந்த கதாபாத்திரத்தை பற்றி சொல்லி இருக்கிறார். உடனே மீனா ஐயோ நான் எப்படி எதிரியாக நடிக்க முடியும்.

ஏற்கனவே அவருக்கு ஜோடியாக நடித்ததால் எங்களை பெஸ்ட் ஜோடி என்று மக்கள் நினைத்து இருக்கும்போது இந்த மாதிரியான ஒரு எதிரி கேரக்டரில் நடித்தால் என்னுடைய மார்க்கெட் சரிந்து விடும் என்று இந்த கேரக்டருக்கு நோ சொல்லிவிட்டாராம். அடுத்ததாக நீலாம்பரி கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நடிகை நக்மாவிடம் கேட்டிருக்கிறார். ஆனால் அவரும் அந்த நேரத்தில் மற்ற படங்களில் பிசியாக இருந்ததால் இதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார்.

Also read: தன்னை கலாய்த்தவரை வீட்டுக்கு கூப்பிட்டு பாராட்டிய சூப்பர் ஸ்டார்.. பெரிய மனுஷனாக நடந்து கொண்ட ரஜினி

அதன்பின் தற்செயலாக இந்த கேரக்டருக்கு உள்ளே வந்து நடித்தது தான் ரம்யா கிருஷ்ணன்.ஆனால் தற்போது இந்த கதாபாத்திரம் வரலாற்று கதாபாத்திரமாக மாறிவிட்டது. அதே போல் ரம்யா கிருஷ்ணனுக்கு இந்த படத்தில் நடிப்பதற்கு முன் இந்த மாதிரியான முக்கியமான கேரக்டர் ஒரு படத்தில் கூட வாய்ப்பு கிடைக்கவில்லையாம்.

அடுத்ததாக படையப்பா படத்தில் நடித்ததை வைத்து தான் ரம்யா கிருஷ்ணனுக்கு, பாகுபலி மற்றும் குயின் படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று நினைக்கும் போது எனக்கு பெருமையாக இருக்கிறது என்று கே எஸ் ரவிக்குமார் கூறியிருக்கிறார். இவர் சொன்ன மாதிரியே இந்த கேரக்டரில் நடித்த பிறகு ரம்யா கிருஷ்ணன் மிகவும் பிரபலமாய் இருக்கிறார்.

Also read: படையப்பா படத்தை காப்பி அடிச்சுட்டாங்களே.. கிளைமாக்ஸில் கூட சுவாரசியம் இல்லாமல் சப்புனு முடியும் பாரதிகண்ணம்மா

- Advertisement -