ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

கோர்ட்டுக்கு போயும் பிரயோஜனம் இல்ல.. சிம்பு மீது கொலகாண்டில் இருக்கும் முதலாளி

Actor Simbu: நடிக்க வந்த புதிதில் சிம்பு செய்யாத சேட்டை கிடையாது. அதனாலேயே அவரை வம்பு பிடித்த நடிகர் என்று கூட கூறுவதுண்டு. ஆனால் சில பல தோல்விகளை சந்தித்த பிறகு அவர் முற்றிலும் தன் நடவடிக்கையை மாற்றிக்கொண்டார்.

அதைத்தொடர்ந்து மாநாடு, வெந்து தணிந்தது காடு போன்ற படங்கள் அவருக்கான வெற்றியை தேடி கொடுத்தது. அது மட்டுமின்றி கமல் தயாரிக்கும் படத்திலும் நடிக்க கமிட்டாகி அதற்காக பல பயிற்சிகளையும் அவர் மேற்கொண்டு வருகிறார்.

Also Read: தயாரிப்பாளர்களை கோர்ட், கேஸ்னு சுத்தலில் விடும் சிம்பு.. காசுக்காக இறங்கி நடிச்ச விளம்பரம்

இந்த சூழலில் தயாரிப்பாளர் ஐசரி கணேசுக்கும் இவருக்கும் இருக்கும் பிரச்சனை கோர்ட் வரை சென்று பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது கொரோனா குமார் படத்தில் நடிக்க சிம்பு மறுத்ததால் நடிகர் சங்கத்தில் புகார் அளித்து ரெட் கார்டு கொடுக்கும் வரை அவர் சென்றார்.

மேலும் முன்பணமாக கொடுத்த ஒன்றரை கோடியை திரும்ப தர வேண்டும் என்ற வழக்கையும் அவர் தொடர்ந்தார். அதன் விசாரணையில் கொரோனா குமார் தொடங்க வருடக் கணக்காகிவிட்ட காரணத்தால் அந்த பணத்தை திருப்பி தர தேவையில்லை என சிம்புவுக்கு சாதகமான தீர்ப்பு தான் வந்தது.

Also Read: சிம்புவிடம் ஒரு கோடி எடுத்து வைக்க சொன்ன தயாரிப்பாளர்.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நீதிபதி

இப்படி கால்ஷீட்டும் போச்சு, காசும் போச்சு என்ற கவலையில் இருக்கும் ஐசரி கணேஷ் சிம்பு மீது கொல காண்டில் உள்ளாராம். இது ஒரு பக்கம் இருக்க கௌதம் மேனனும் அவர் மீது அதிருப்தியில் இருக்கிறாராம். இவர்களின் கூட்டணியில் வெளிவந்த விண்ணைத்தாண்டி வருவாயா இன்றும் கூட இளைஞர்களின் ஃபேவரைட்டாக இருக்கிறது.

அதேபோன்று தான் வெந்து தணிந்தது காடு படமும் ஹிட் அடித்தது. ஆனால் இந்த இரு பட சூட்டிங்கின் போதே சிம்புவுக்கும் இயக்குனருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனாலேயே இப்போது இதன் இரண்டாம் பாகம் என்ன ஆகும் என்ற கவலையும் கௌதம் மேனனுக்கு இருக்கிறதாம். ஆனால் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாத சிம்பு ஜாலியாக தன் வேலையை பார்த்து வருகிறார்.

Also Read: மணிரத்தினத்திடம் எடுபடாமல் போன சிம்புவின் சில்மிஷங்கள்.. பாம்பு புற்றிலே மகுடி வாசிச்சாலும் வேலைக்காகல

- Advertisement -

Trending News