தொடர் ஹிட்படங்கள் கொடுத்தும் பிரயோஜனம் இல்லை.. புலம்பி வரும் சாய்பல்லவி

நடிகைகளின் தொடர் படங்கள் ஹிட்டாகி விட்டால் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வருவது சகஜமானது தான். அப்படி வரும் படங்களில் நடித்து தங்களது மார்க்கெட் சம்பளங்களை உயர்த்தி ஒரு ரவுண்டு வருவார்கள். அந்த வகையில் தற்போது முன்னனி நடிகையாக இருப்பவர் தான் நடிகை சாய்பல்லவி. மலையாளத்தில் வெளியான ப்ரேமம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமான இவர் தொடர்ந்து தமிழ், தெலுங்கு என படங்களில் நடித்து வந்தார்.

தமிழை காட்டிலும் தெலுங்கில் இவரது மார்க்கெட் சற்று உயர்ந்துள்ளது எனலாம். அண்மைக்காலமாக தெலுங்கில் இவர் நடித்த விரட்டா பர்வம், ஷாம் சிங்கா ராய் உள்ளிட்ட படங்கள் அவருக்கு தெலுங்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை கொடுத்துள்ளது. நடிப்பைத் தாண்டி அவரது நடனத்திற்கு மட்டுமே இந்திய சினிமாவில் பல ரசிகர்கள் உள்ளனர் எனலாம்.

Also Read: அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய சொன்ன தயாரிப்பாளர்.. பட வாய்ப்பை உதறித் தள்ளிய சாய்பல்லவி!

இதனிடையே சாய்பல்லவி இவ்வளவு ஹிட் படங்களை கொடுத்தும் அவருக்கு பிரயோஜனம் இல்லாமல் உள்ளது. சாய்பல்லவி தமிழில் கடந்தாண்டு நடிகர் சூர்யாவின் தயாரிப்பில் உருவான கார்கி படத்தில் நடித்திருந்தார். செய்யாத குற்றத்திற்காக தண்டனை அனுபவித்து வரும் தந்தையை காப்பாற்ற போராடும் மகளாகவும், அதே தந்தை தவறு செய்தார் என்று தெரிந்தவுடன் நியாயத்தை நிலை நாட்டிய பெண்ணாகவும் சாய் பல்லவி நடித்திருப்பார்.

இப்படம் சாய்பல்லவியின் கேரியரில் முக்கியமான படமாக அமைந்த நிலையில் தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக உள்ள எஸ்கே 24 படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். முதன்முறையாக சாய்பல்லவியுடன் சிவகார்த்திகேயன் ஜோடி சேரவுள்ள நிலையில் இப்படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Also Read: அவர் இஷ்டத்திற்கு வர முடியாது.. கோபத்தில் சாய்பல்லவி இடத்துக்கு வந்த திரிஷாவும் எஸ்கேப்

இதனிடையே சாய்பல்லவி இந்த படத்தையடுத்து வேறு எந்த ஒரு படத்திலும் கமிட்டாகாமல் உள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏறபடுத்தியுள்ளது. 2022 இல் சாய்பல்லவி பல படங்கள் நடித்த நிலையில் இந்தாண்டு அவர் கையில் ஒரே ஒரு படம் தான் உள்ளது, அதுவும் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படமால் உள்ளது. இப்படி ஒரு நிலைமையா சாய்பல்லவிக்கு வந்துள்ளது என அவரது ரசிகர்கள் அதிர்ந்து போயுள்ளனர்.

30 வயதை அடைந்துள்ள சாய்பல்லவி , சினிமாவில் அதிக கவர்ச்சியை காட்டாமல் நடித்து பிரபலமானவர். விழா மேடைகள்,விருது வழங்கும் மேடைகள் உள்ளிட்ட எல்லாவற்றுக்கும் புடவையை அணிந்து கொண்டே செல்லும் சாய் பல்லவி புது ட்ரண்டிக்கையே உருவாக்கியவர். தற்போது இவருக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் உள்ளது தான் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

Also Read: சாய்பல்லவியை வைத்து குழப்பிய சிவகார்த்திகேயன்.. அப்போ அம்மணி அதுல ஹீரோயின் இல்லையா?

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்