பொங்கலுக்கு வாரிசு வெளிவர வாய்ப்பே இல்ல.. வம்சி தலையில் இடியை இறக்கிய திரை பிரபலங்கள்

வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் வாரிசு. இப்படத்தை தில் ராஜு தயாரித்து வருகிறார். இந்தப் படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பலரும் தெலுங்கு திரையுலகை சார்ந்தவர்கள். ஆகையால் இது தெலுங்கு படமா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஆனால் இப்படம் முழுக்க முழுக்க தமிழில் எடுக்கப்பட்டு தெலுங்கு மொழியில் டப் செய்யப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் வாரிசு படத்தின் முதல் சிங்கள் பாடலாக ரஞ்சிதமே பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வாரிசு படத்தின் மூலம் விஜய்க்கு முதல் முறையாக தமன் இசையமைத்துள்ளார்.

Also Read : கேவலமான பாடல் வரிகள், சர்ச்சையில் சிக்கிய வாரிசு பட ரஞ்சிதமே.. தளபதி இதுதான் உங்க சமூக பொறுப்பா?

இந்நிலையில் வாரிசு படம் அஜித்தின் துணிவு படத்திற்கு போட்டியாக பொங்கல் பண்டிகை முன்னிட்டு ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் தற்போது ஒரு சிக்கல் எழுந்துள்ளது. அதாவது தெலுங்கு சினிமாவில் அந்த மொழியில் எடுக்கப்பட்ட படங்கள் மட்டுமே பண்டிகை காலங்களில் வெளியிட அனுமதி அளிக்கப்படுகிறது.

ஆகையால் வாரிசு படம் தமிழ் மொழியில் எடுக்கப்பட்டு தெலுங்கில் டப் செய்யப்பட்டுள்ளதால் பொங்கல் பண்டிகைக்கு தெலுங்கு திரையில் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை எப்படி சரி செய்வது என்று தெரியாமல் படக்குழு முழித்து வருகிறார்கள்.

Also Read : 250 கோடி, 300 கோடி கதையெல்லாம் சும்மாவா.. உள்ளூரில் வியாபாரம் ஆகாத தளபதியின் வாரிசு

அதுமட்டுமின்றி தெலுங்கு சினிமாவில் உள்ள தளபதி ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் வாரிசு படத்தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்யாமல் வேறு ஒரு நாளில் வெளியிடலாமா என யோசித்து வருகிறார்கள். அல்லது தமிழ் மொழியில் பொங்கல் அன்று வெளியிட்டு மற்ற மொழிகளில் வேறொரு நாட்களில் வெளியிடவும் அதிக வாய்ப்பு உள்ளது.

ஆனால் தெலுங்கு ஊடகங்களில் வாரிசு படம் ஜனவரி 26 இல் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே வாரிசு படத்தின் புகைப்படங்கள் வெளியாகி படக்குழுக்கு மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்தி வந்த நிலையில் இப்போது வந்துள்ள புது பிரச்சனையால் செய்வதறியாமல் உள்ளனர். 2019-இல் தயாரிப்பாளர் தில் ராஜ் போட்ட கண்டிஷன் தான் இது, தற்போது அவருக்கு விணையாக வந்துள்ளது. ஏனென்றால் அவர் பேசிய வீடியோக்களை திரைப்பிரபலங்கள் சோசியல் மீடியாவில் தற்போது வைரலாகி வருகின்றனர்.

Also Read : விஜய் 130 கோடி எல்லாம் ஒரு சம்பளமா? எம்ஜிஆரின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஆவேசமாக பேசிய எஸ்ஏசி

- Advertisement -