எனக்கும் லோகேஷுக்கும் பெரிய வித்தியாசம் இல்ல.. துணிவு பேட்டியில் ஓப்பனாக போட்டுடைத்த ஹெச்.வினோத்

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி உள்ள அஜித்தின் துணிவு படத்தின் ட்ரைலர் வெளியாகி சக்கைப்போடு போட்டு வருகிறது. விஜயின் வாரிசு படத்தின் ட்ரைலருக்கு முன்பாகவே துணிவு பட ட்ரைலர் ரிலீசான நிலையில் 55 மில்லியனுக்கும் மேலான பார்வையாளர்களை கடந்து இணையத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

இதனிடையே இப்படத்திற்கு அஜித்தின் சார்பாகவோ, துணிவு பட குழு சார்பாகவோ எந்த ஒரு ப்ரோமோஷன் வேலைகளும் நடைபெறவில்லை. இருந்தாலும் அஜித்தின் துணிவு படம் தான் தற்போது ரசிகர்கள் ஆர்வமாக பார்க்கவுள்ள படத்தில் முதலிடத்தில் உள்ளது. அந்த அளவுக்கு படத்தில் சண்டை, ஆக்ஷன், மாஸ் காட்சிகள் இடம்பெற்றிருக்கிறது.

Also Read: துணிவு படத்திற்கு வினோத் முதலில் தேர்வு செய்த ஹீரோ.. மனைவியால் அஜித்துக்கு அடிச்ச அதிர்ஷ்டம்

மேலும் அஜித்தின் லுக்கும் இப்படத்தில் செம ஸ்டைலாக காண்பித்துள்ளார் ஹெச்.வினோத். முந்தைய திரைப்படமான வலிமை படத்தில் அஜித்தின் போலீஸ் தோற்றம் ரசிகர்களை சற்று அதிருப்தி அடைய வைத்தது. இதனை மறக்கடிக்கும் வகையில் துணிவு படத்தில் அஜித்தின் தோற்றம் அழகாக காட்சிபடுத்தியுள்ளார். மேலும் மஞ்சு வாரியாரின் லுக்கும் அஜித்திற்கு இணையாக ஸ்டைலாக உள்ளது.

இதனிடையே அண்மையில் இப்படத்தின் இயக்குனர் ஹெச் வினோத் பேட்டி ஒன்றில் துணிவு படத்தை பற்றி பேசியுள்ளார். படத்தின் மேக்கிங்கை பற்றியும், அஜித்தின் நடிப்பு பற்றியும் ஆர்வமாக பேசினார். மேலும் தற்போது வளர்ந்து வரும் இயக்குனரை குறித்து ஹெச்.வினோத்திடம் அந்த பேட்டியில் கேள்விக் கேட்கப்பட்டது. தமிழில் மாநகரம் திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து கைதி, மாஸ்டர், விக்ரம் என கலக்கினார்.

Also Read: ஜெட் வேகத்தில் எகிறிய வினோத்தின் மார்க்கெட்.. அஜித்தால் அடுத்தடுத்து வரிசை கட்டி நிற்கும் 4 படங்கள்

இந்நிலையில் லோகேஷ் கனகராஜை பற்றி கூறிய ஹெச் வினோத்,லோகேஷ் கதை சொல்வதில் மிகவும் பொறுமைசாலி, கிரைம் உலகை மையமாக வைத்து லோகேஷ் படங்களை இயக்கி வெற்றிக் கொடுத்து வருகிறார், நானும் கிரைம் சம்மந்தமான கதையை தான் இயக்குகிறேன். ஆனால் என் கதையில் கிரைமில் நடக்கும் அரசியல் என்ன என்பதைப் பற்றி என் படங்கள் சொல்லும்.

ஒரு வகையில் நானும் லோகேஷும் ஒரே மாறித்தான், ஆனால் வெவேறு கோணங்களில் கிரைம் கதையை எடுத்து மக்களிடம் கொண்டு சேர்ப்பதாக ஹெச்.வினோத் பேசியுள்ளார். தற்போது இயக்குனர் ஹெச்.வினோத் லோகேஷ் கனகராஜை பற்றி பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் லோகேஷ்கனகராஜ் அடுத்ததாக விஜயின் கூட்டணியின் தளபதி 67 படத்தை எடுக்க மும்முரமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read:மோசமான கெட்டவனாக துணிவில் அஜித்தை பார்க்கலாம்.. வினோத் அப்டேட்டால் ஆடிப் போன கோலிவுட்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்