நம்ம ஆளு தான் தம்பி விஜய்ன்னு சீமான் சொன்னதுக்கு காரணம் இருக்கு.. கோட் பாடலில் தளபதி காட்டிய ஆதரவு

Vijay: இந்த ஆண்டு கோட் படத்துக்கு விசில் போடு, 2026 ஆம் ஆண்டு தளபதிக்கு ஓட்டு போடு என்று விஜய், ரசிகர்களுக்கு மறைமுகமாக ஒரு விஷயத்தை சொல்லி இருக்கிறார். அதாவது நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி இருப்பதால் பிரச்சாரம் நாலா பக்கமும் கலைகட்டி வருகிறது.

இந்த நேரத்தில் விஜய் அவருடைய பங்குக்கு கோட் பாடலில் மூலம் சீமானுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார். அதாவது ஏற்கனவே சீமான், விஜய் சட்டமன்ற தேர்தலில் நிற்கப் போகிறார் என்று தெரிந்ததும் நம்ம தம்பி தான் விஜய் என்று சொல்லி அவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்து பேசியிருந்தார்.

அப்படி அவர் பேசியதற்கான காரணம் என்னவென்று இப்பொழுது தான் புரிகிறது. ஏனென்றால் விஜய்யும் சீமானுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கோட் படத்தில் பாடியிருக்கிறார். அதாவது “பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா? அதிரடி கலக்கட்டுமா?” என்ற வரிகளில் மூலம், கட்சி ஒன்றை ஆரம்பித்து அதன் மூலம் அதிரடி காட்டப் போகிறேன் என்று சொல்லி இருக்கிறார்.

“கேம்பியனை தொறக்கட்டுமா? மைக்கை கையில் எடுக்கட்டுமா?” என்ற வரிகளுக்கு ஏற்ப கூட்டணி கட்சி ஆரம்பிக்கட்டுமா, அதில் சீமானுடன் இணையீட்டுமா என்று மைக்கை வைத்து சிம்பாலிக்காக சொல்லி இருக்கிறார்.

அந்த வகையில் அநியாயங்களுக்கு எதிராக குரல் கொடுப்பேன் என்பதற்காகவும் வெற்றி எனக்கு கிடைக்கும் பொழுது என்னுடைய ரசிகர்கள் எனக்காக வெடி முழக்கம் போடுவார்கள் என்று சொல்வதற்கு ஏற்ப, “இடி இடிச்சா என் வாய்ஸ் தான். வெடி வெடிச்சா என் பாய்ஸ் தான்” என்று பாடி இருக்கிறார்.

பாடலிலே அதகளப்படுத்திய தளபதி

இதனைத் தொடர்ந்து “குடிமகன் தான் நம் கூட்டணியாக இருக்க வேண்டும், கட்சியை விட்டு நான் போக மாட்டேன்”. இந்தக் கூட்டம் போதாது இன்னும் சேர்ந்து ஓட்டு போடணும் நண்பி நண்பா ஓட்டு போடுங்கள் என்று இப்பொழுதே அவருடைய ஆதரவை கேட்டு குரல் கொடுக்க ஆரம்பித்து விட்டார்.

பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா? அதிரடி கலக்கட்டுமா?
கேம்பியனை தான் தொறக்கட்டுமா? மைக்கை கையில் எடுக்கட்டுமா?
இடி இடிச்சா என் வாய்ஸ் தான். வெடி வெடிச்சா என் பாய்ஸ் தான்
குடிமகன் தான் நம் கூட்டணி, பார்ட்டி விட்டு தான் போ மாட்டேன் நீ
சத்தம் பத்தாது விசில் போடு, குத்தம் பாக்காம விசில் போடு
ரத்தம் பாத்ததும் விசில் போடு ஹே நண்பி நண்பா விசில் போடு

பாடலிலே இப்படி ஒரு ரணகளத்தை ஏற்படுத்திய தளபதி இன்னும் கோட் படத்திலும் வரப்போகிற தளபதி 69 படத்திலும் என்னென்ன சம்பவத்தை எல்லாம் செய்ய போகிறாரோ பொறுத்திருந்து பார்க்கலாம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்