ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

ராதாரவி மீது அடுக்கடுக்காக வரும் சர்ச்சைகள்.. சிக்கி தவிக்கும் பல குடும்பங்கள்

மூத்த நடிகராக இருக்கும் ராதாரவி எப்போதுமே சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாதவர். சினிமா மேடைகளில் தேவையில்லாத விஷயங்களை பேசுவது, நடிகைகளை விமர்சிப்பது என இவ பேசும் ஒவ்வொன்றுமே பூதாகரமாக வெடிக்கும். ஆனாலும் இவர் எதைப் பற்றியும் கவலைப்படாமல் தன் போக்கில் பேசி பிரச்சனைகளை உருவாக்குவார்.

அந்த வகையில் தற்போது இவரால் பல குடும்பங்கள் பிரச்சனையில் சிக்கித் தவிக்கும் நிலைமை உருவாகி இருக்கிறது. அதாவது பல வருடங்களாக ராதாரவியின் தலைமையில் தான் டப்பிங் யூனியன் செயல்பட்டு வருகிறது. அப்போதிலிருந்தே இவர் மீது அடுக்கடுக்கான புகார்கள் வந்தது. சமீபத்தில் கூட பாடகி சின்மயி முறையான சந்தா கட்டவில்லை என்பதற்காக யூனியனிலிருந்து நீக்கப்பட்டார்.

Also read: ஹீரோயினாக ஆசைப்பட்டு சர்ச்சையில் சிக்கிய நடிகை.. இதுக்கெல்லாம் தேவையா என மேடையிலேயே அசிங்கப்படுத்திய ராதாரவி

இது குறித்து பேசி இருந்த ராதா ரவி அவரை ஒருமையில் மிகவும் அநாகரிகமாக பேசியது சர்ச்சைகளை கிளப்பியது. அதை தொடர்ந்து சின்மயியும் தன் பங்குக்கு சில புகார்களை அடுக்கினார். இந்நிலையில் தற்போது அந்த டப்பிங் யூனியன் கட்டிடத்திற்கு அரசு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். அதாவது சமீபத்தில் ராதாரவி உறுப்பினர்களின் பணத்தில் அந்த கட்டிடத்தை புதுப்பிக்கும் பணியை தொடங்கி இருந்தார்.

ஆனால் விதிகளை மீறி யூனியன் கட்டிடம் கட்டப்படுவதாக ஒரு புகார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து ராதாரவியும் பதில் மனு தாக்கல் செய்திருக்கிறார். இது குறித்து நடந்த விசாரணையில் தான் தற்போது கட்டிடத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டதை தொடர்ந்து தற்போது ராதா ரவி அந்த சீலை அகற்ற வேண்டும் என்று தன் தரப்பு நியாயத்தை கோரி பதில் மனு தாக்கல் செய்திருக்கிறார்.

Also read: அரசியலில் இறங்கி சினிமாவில் கெட்ட பெயர் வாங்கிய 5 நடிகர்கள்.. அருவருப்பாக பேசி அசிங்கப்பட்ட ராதாரவி

மேலும் தான் இதன் தலைவராக பொறுப்பேற்றதை தாங்க முடியாமல் சிலர் செய்த வேலை தான் இது என்றும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது இந்த விஷயம் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே ராதாரவி மீது பணம் தொடர்பாக பல குற்றச்சாட்டுகள் இருந்து வரும் நிலையில் இந்த விஷயமும் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

அது மட்டுமல்லாமல் இத்தனை வருடங்களாக அந்த கட்டிடம் எந்த பிரச்சினையும் இல்லாமல் தான் இருந்தது. ஆனால் தற்போது கிளம்பி இருக்கும் இந்த பிரச்சனைகளை வைத்து பார்க்கும் போது ராதாரவியை அந்த பதவியிலிருந்து அப்புறப்படுத்துவதற்காக தான் இது போன்ற வேலைகள் நடக்கிறதா என்றும் கேள்வி எழுப்பப்படுகிறது. இருப்பினும் இந்த விஷயத்தில் நீதிமன்றம் என்ன முடிவெடுக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Also read: நீ ஒரு பரதேசி, ராதாரவியை வெட்டியான் என பதிலடி கொடுத்த நடிகர்.. பொது இடத்தில் இப்படியா சண்டை போட்டுப்பீங்க!

- Advertisement -

Trending News