பிரசாந்தை வளைத்து போட நினைத்த 5 நடிகைகள்.. எவ்வளவு காட்டினாலும் சிட்டாய் பறந்த மம்பட்டியான்

தமிழ் சினிமாவில் 90களில் சாக்லேட் பாயாக ரசிகர்களைக் கவர்ந்தவர் பிரசாந்த். இவர் நடிகரும் இயக்குனருமான தியாகராஜனின் மகனாக சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தாலும் தன்னுடைய திறமையினாலேயே தனக்கென ஒரு இடத்தை வகுத்தார். அதிலும் இவர் முன்னணி நடிகைகள் 5 பேரின் காதல் வலையில் சிக்காமல் டாட்டா காட்டியுள்ளார்.

மோகினி: 1992 ஆம் ஆண்டு காதல் திரைப்படமாக வெளியான உனக்காக பிறந்தேன் என்ற என்ற படத்தில் மோகினி மற்றும் பிரசாந்த் இருவரும் இணைந்து நடித்திருப்பார்கள். இதில் காதலுக்காக கடலையே நீந்தி சென்று தன்னுடைய காதலியை பார்க்கும் காதலனாக பிரசாந்த் ரசிகைகளின் கண்ணனாகவே மாறினார். இந்த படத்தில் நிஜ காதலராகவே மாறி நடித்திருக்கும்

இவர்களின் இவர்களின் கெமிஸ்ட்ரி அல்டிமேட் ஆக இருந்தது. அதிலும் மோகினி, பிரசாந்த் உடன் நடிக்கும் போது கொஞ்சம் கவர்ச்சி தூக்கமாகவே நடிப்பார். ஆனால் அப்போதும் பிரசாந்த் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் நடிப்பிலேயே முழு கவனத்தையும் செலுத்தி இருப்பார். இவர்கள் இருவரும் மீண்டும் கண்மணி படத்திலும் ஜோடி சேர்ந்தனர்.

Also Read: பிரசாந்த் வெற்றிக்கு காரணம் வடிவேலு.. இது என்ன புது புரளியா இருக்கு

வினோதினி: மணல் கயிறு, புதிய சகாப்தம் போன்ற படங்களில் மூலம் அறிமுகமாகி, அதன் பிறகு பாலு மகேந்திரா இயக்கிய வண்ண வண்ண பூக்கள் என்ற படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் தோன்றி இருப்பார். இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன வாயிலாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் வினோதினி பிரசாந்துக்கு ஜோடியாக நடித்து அசத்தினார். இவர்களுடன் மௌனிகாவும் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

இந்த படம் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதையும் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதில் பிரசாந்த் உடன் வினோதினி கொஞ்சம் கவர்ச்சி அதிகமாகவே நடித்திருப்பார். இதனாலேயே இவர்கள் இருவரும் பெரிதும் கிசு கிசுக்கப்பட்டாலும், அந்த சமயத்தில் கடைசிவரை பிரசாந்த் கெத்து காட்டாமல் கம்பீரமாகவே சினிமாவில் ரவுண்டு கட்டிக் கொண்டிருந்தார்.

மதுபாலா: மலையாளம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் தனது பங்களிப்பை கொடுத்த நடிகை மதுபாலா. 1994 ஆம் ஆண்டு பிரசாந்த் கதாநாயகனாக நடித்த செந்தமிழ்ச்செல்வன் படத்தில் கதாநாயகியாக மதுபாலா இணைந்து நடித்தார். இவர்களுடன் சிவரஞ்சனி, செந்தில், சுஜாதா, விஜயகுமார், சார்லி உள்ளிட்டோர் இணைந்து நடித்தனர் இந்த படத்தில் பிரசாந்த் மற்றும் மதுபாலா இருவருக்கும் கெமிஸ்ட்ரி பக்காவாக வொர்க் அவுட் ஆகி இருந்தது. இதனால் இவர்கள் இருவரும் காதலர்களாக மாறுவார்கள் என பலரும் யூகித்த நிலையில், இதற்கு பிரசாந்த் கொஞ்சம் கூட பிடிகொடுக்காமல் மதுபாலா பக்கம் திரும்பாமலே இருந்தார்.

Also Read: பிரசாந்தின் சினிமா வாழ்க்கையை புரட்டி போட்ட 6 படங்கள்.. அதிலும் ஷங்கர் டைரக்ஷன் செம மாஸ்

ஹீரா: மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர், தமிழில் முரளியுடன் இதயம் படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின் 1996 ஆம் ஆண்டு பிரசாந்த் கதாநாயகனாக நடித்த கிருஷ்ணா படத்தில் தாரா என்ற கதாபாத்திரத்தில் இணைந்து நடித்திருப்பார். இதில் நடிகை கஸ்தூரியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இந்தப் படத்தில் இடம்பெற்றிருக்கும் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது. அத்துடன் இதில் ஹீரா பிரசாந்தை காதலிக்க நினைத்ததாகவும், ஆனால் பிரசாந்த் அதற்கு இடம் கொடுக்காமல் எஸ்கேப் ஆனாராம்.

ரம்பா: தொடையழகியாக ரசிகர்களை கவர்ந்த ரம்பா, 90களில் தமிழ் சினிமாவை ரவுண்டு கட்டிய கதாநாயகி என்ற சொல்லலாம். இவர் பிரபு, அர்ஜுன், பிரபுதேவா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய் உள்ளிட்ட பிரபலங்களுடன் ஜோடி சேர்ந்து டாப் ஹீரோயின் ஆக வலம் வந்தார். இவர் 1999 ஆம் ஆண்டு பிரசாந்த் கதாநாயகனாக நடித்த பூமகள் ஊர்வலம் என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக இணைந்து நடித்திருப்பார்.

குடும்பம், காதல், நகைச்சுவை என ரசிகர்களுக்கு பிடித்தமான கதை களத்துடன் உருவான இந்த படத்தில் ஜாதி மறுப்பு திருமணத்தை துணிந்து செய்யும் காதலர்களாக இவர் வெற்றி கண்டனர். இந்தப் படத்தில் இருவருக்கும் சூப்பராக கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனதால் ரம்பாவுக்கும் பிரசாந்த் மீது இனம் புரியாத கவர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. ஆனால் ரம்பா கையில் சிக்காமல் பிரசன்னா சிட்டாய் பறந்து விட்டார்.

Also Read: மாஸ்டர் பிரபுதேவாவிற்கே டஃப் கொடுத்த பிரசாந்த்.. நடனத்தில் அசத்திய 5 படங்கள்

இவ்வாறு இந்த 5 நடிகைகளும் பிரசாந்துடன் இணைந்து நடித்து சூப்பர் ஹிட் கொடுத்தது மட்டுமின்றி ஒரு கட்டத்தில் அவரை அடையவும் துடிதுடித்திருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கெல்லாம் டாட்டா காட்டிவிட்டார் மம்பட்டியான்.

- Advertisement -