ரேணிகுண்டா, பில்லா 2 படத்தில் நடித்த தீப்பெட்டி கணேசன் திடீர் மறைவு.. திரை பிரபலங்கள் இரங்கல்

தமிழ் சினிமாவில் பல நகைச்சுவை நடிகர்கள் தங்களுக்கான சிறந்த இடத்தை பிடித்துள்ளனர். அப்படி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் தீப்பெட்டி கணேசன் என்கிற கார்த்திக்.

இவர் கிட்டத்தட்ட ரேணிகுண்டா, தென்மேற்கு பருவக்காற்று, பில்லா மற்றும் கண்ணே கலைமானே போன்ற பல படங்களில் நடித்துள்ளார். அதிலும் பிரபல நடிகரான அஜித்துடன் பில்லா படத்தில் இணைந்து நடித்து அஜித் ரசிகர்களிடம் ஓரளவுக்கு பிரபலமானார்.

ஒரு சில காலமாக இவருக்கு சினிமாவில் எந்த ஒரு பட வாய்ப்பு வராததால் மிகப்பெரிய வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டார். அதுமட்டுமில்லாமல் வீடியோவாக அஜித் மற்றும் பிரபல நடிகர்கள் உதவி செய்யுமாறு கோரிக்கை வைத்தார்.

karthik
karthik

இந்த வீடியோக்கள் வைரலாகி அவருக்கு உதவி செய்வதாகவும் சினிமா தரப்பிலிருந்து பலரும் கூறி வந்தனர். வறுமையில்லிருந்த தீப்பெட்டி கணேசன் அதன்பிறகு உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார்.

இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த தீப்பெட்டி கணேசன் இன்று உடல்நிலை குறைவால் காலமானார். தற்போது இதனால் பல பிரபலங்களும் தீப்பெட்டி கணேசன் குடும்பத்தினருக்கு தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

அது மட்டுமில்லாமல் தீப்பெட்டி கணேசனுடன் சினிமாவில் நடித்த பிரபலங்கள் மற்றும் மக்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலை கூறிவருகின்றனர்.

Stay Connected

1,170,257FansLike
132,059FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -