படு மட்டமான நடந்துகொள்ளும் திரையரங்கு உரிமையாளர்கள்.. விஜய் இல்லைனா நீங்க ஒண்ணுமே இல்ல

விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான பீஸ்ட் படம் தமிழ்நாட்டில் மட்டும் 800 திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனால் கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்கள், யூடியூப் பேட்டிகள் என அனைத்திலும் பீஸ்ட் மற்றும் விஜய்யை பற்றி மட்டம் தட்டும் விதமாக திரையரங்கு உரிமையாளர்கள் பேசி வருகிறார்கள்.

இதற்கு சிலர் சரியான பதிலடி கொடுத்து கண்டனம் தெரிவித்துள்ளனர். அதாவது கே ஜி எஃப் போன்ற படங்கள் சினிமாவில் அரிதாக வரும் பிரம்மாண்ட படங்கள். இப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சாதனை படைத்து வருகிறது. அதேபோல் பீஸ்ட் படமும் வசூல் சாதனை படைத்தது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.

கேஜிஎஃப் படத்துடன் தனது படத்தை வெளியிட எந்த நடிகர்களும் தயங்குவார்கள். ஆனால் துணிச்சலாக விஜய் தனது பீஸ்ட் படத்தை வெளியிட்டார். மேலும் தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளில் பீஸ்ட் படத்தால் எந்த நஷ்டமும் ஏற்படவில்லை. இந்த ஆண்டு 2022 இல் வெளியான தமிழ் படங்களில் அதிக வசூல் சாதனை படைத்த படம் பீஸ்ட்.

நடிகர் விஜய்யின் திரைபடத்தை திரையிட்ட அனைத்து திரையரங்குகளுக்கும் நல்ல லாபம் கிடைத்துள்ளது. அதையெல்லாம் மறந்துவிட்டு திரையரங்கு உரிமையாளர்கள் விஜய்யை மட்டம் தட்டி பேசி வருகிறார்கள். மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டிருந்தது.

இதனால் பலரும் தங்கள் படங்களில் ஓடிடியில் வெளியிட்டு வந்தார்கள். அப்போது கடுமையான காலகட்டம் என்றாலும் விஜய் தனது மாஸ்டர் படத்தை திரையரங்குகளில் வெளியிட்டார். அன்று திரையரங்குகளுக்கு வாழ்வு தந்த விஜய்யை புகழ்ந்து பேசிய திரையரங்க உரிமையாளர்கள் இன்று ஏதோ ஒரு நோக்கத்துடன் பீஸ்ட் படத்தைப் பற்றி எதிர்மறையான கருத்துக்களை கூறிவருகிறார்கள்.

அனைத்து படங்களுமே மிகப்பெரிய வெற்றிப்படமாக யாராலும் கொடுக்க முடியாது. மேலும் சில படங்களில் குறைகள் இருக்கத்தான் செய்யும். அதை ரசிகர்கள் விமர்சிக்கலாம் ஆனால் திரையரங்கு உரிமையாளர்கள் ஏளனமாக பேசுவது மிகவும் கண்டிக்கத்தக்கது என பலரும் விஜய்க்கு ஆதரவாக பேசி வருகிறார்கள்.

- Advertisement -