ஆன்ட்டி இந்தியன் அளவுக்கு இருக்காது.. ப்ளூ சட்டை மாறனை கேவலப்படுத்திய தியேட்டர் ஓனர்

சினிமாவில் ஒரு திரைப்படம் வெளியானால் அந்த திரைப்படத்தின் நிறை, குறைகளை பலரும் விமர்சனம் செய்வது வழக்கமான ஒன்று தான். சோசியல் மீடியா பெருகிவிட்ட இந்த காலகட்டத்தில் பல யூட்யூப் சேனல்களும் திரைக்கு வரும் திரைப்படங்களை பற்றிய தங்கள் கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்து வருகின்றது.

அந்த வகையில் ப்ளூ சட்டை மாறன் தன்னை தானே திரைப்பட விமர்சகர் என்று சொல்லிக்கொண்டு ஒரு படத்தின் குறைகளை மட்டுமே பேசி வருகிறார். அதிலும் ரஜினி, கமல், அஜீத், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளிவரும் சமயத்தில் ரசிகர்களின் கருத்துக்கு மாறாக இவர் மட்டும் படம் மோசமாக இருக்கிறது என்ற ஒரு கருத்தை கூறுவார்.

இதனால் முன்னணி நடிகர்களின் ரசிகர்கள் இவரை சமூக வலைத்தளங்களில் கண்டபடி திட்டி வருகின்றனர். அதிலும் ஒரு சிலர் படம் எடுத்து பார்த்தால் தான் அதன் அருமை தெரியும் என்று அவருக்கு எதிராக பேசினார்கள். இதனால் வெகுண்டெழுந்த ப்ளூ சட்டை, ஆன்ட்டி இந்தியன் என்ற ஒரு திரைப்படத்தை இயக்கினார்.

பல சர்ச்சைகளையும், பிரச்சனைகளையும் சந்தித்த அந்த திரைப்படம் வந்த வேகத்திலேயே காணாமல் போனது. தற்போது அதை பற்றி ஒரு தியேட்டர் உரிமையாளர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அதாவது ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சரவணா ஸ்டோர் உரிமையாளர் நடித்திருந்த தி லெஜண்ட் திரைப்படத்தின் டிரெய்லர் அதிக பார்வையாளர்களை கவர்ந்ததாக குறிப்பிட்டிருந்தார்.

மேலும் மற்ற முன்னணி நடிகர்களின் படத்தை விட தி லெஜண்ட் ட்ரைலர் தான் அதிக வியூஸ் பெற்றுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இதைப் பார்த்த ஒரு தியேட்டரின் உரிமையாளர் உங்களின் ஆன்ட்டி இந்தியன் திரைப்படத்தை எங்கள் தியேட்டரில் இரண்டு காட்சிகள் வெளியிட்டோம்.

அந்த இரண்டு கட்சிகளுக்கும் சேர்த்து மொத்தம் 17 பேர் தான் படத்தை பார்த்தனர். அதன் பிறகு அடுத்த காட்சிக்கு நாங்கள் வேறு படத்தை மாற்றி விட்டோம். ஆனால் தி லெஜண்ட் திரைப்படம் உங்கள் படம் அளவுக்கு இருக்காது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனுக்கு இந்த அவமானம் தேவையா என்று கலாய்த்து வருகின்றனர். ஒரு திரைப்படத்தை ரோசப்பட்டு இயக்கினால் மட்டும் போதாது, அதை தரமாக கொடுக்கவும் தெரிய வேண்டும். உங்களுக்கு மற்ற படங்களை பற்றி பேசுவதற்கு தகுதியே கிடையாது என்று ரசிகர்கள் அவரை கிண்டல் செய்து வருகின்றனர்.