அஜித், விஜய்யை ஓவர்டேக் செய்ய தன்னைத்தானே செதுக்கும் நடிகர்.. அவங்க மாஸ் தலைவா, நீங்க வேற லெவல்

திரையுலகில் முன்னணி இடத்தை பிடித்துள்ள விஜய், அஜித் இருவருக்கும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இவர்கள் இருவரில் எந்த நடிகர் மாஸ் என்ற போட்டி திரையுலகில் மறைமுகமாக இருந்து வருகிறது. அதற்கேற்றார் போல் அவருடைய ரசிகர்களும் சோசியல் மீடியாவில் தங்களுக்கு பிடித்த நடிகரை பற்றி எப்போதுமே காரசாரமாக விவாதம் செய்வது வழக்கம்.

தமிழ் மட்டுமல்லாமல் மற்ற மொழிகளிலும் கூட இந்த இரண்டு நடிகர்களுக்கும் நல்ல வரவேற்பு இருக்கிறது. மேலும் இவர்கள் இருவரும் தற்போது பாக்ஸ் ஆபிஸ் கடவுளாகவே பார்க்கப்பட்டு வருகிறார்கள். இதைப் பார்த்த ஒரு முன்னணி நடிகரும் நாமும் அதே போன்ற கெத்தோடு வலம் வர வேண்டும் என்பதற்காக சில பல வேலைகளை ஆரம்பித்திருக்கிறாராம்.

Also read : டிஆர்பி ரேஸில் முதலிடம் பிடித்த விஜய்.. கமல், அஜித்தை பின்னுக்கு தள்ளிய பீஸ்ட்

நன்றாக நடிக்க கூடிய அந்த நடிகர் தேசிய விருது வாங்கும் அளவுக்கு முன்னேறி இருக்கிறார். மாஸான திரைப்படங்களில் மட்டும் தான் நடிப்பேன் என்று இல்லாமல் சமூக அக்கறை கொண்ட பல விஷயங்களையும் தன்னுடைய திரைப்படத்தின் மூலம் வெளிப்படுத்தி வருகிறார். அதனாலேயே இவருக்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு நல்ல பெயர் இருக்கிறது.

இவ்வளவு புகழ் இருந்தாலும் அவருக்கு மனதளவில் விஜய், அஜித் அளவுக்கு நம்மால் வளர முடியவில்லை என்ற வருத்தம் இருக்கத்தான் செய்கிறது. அதனால் அவர் இப்போது முன்பு போல் மீடியாக்களில் அதிகம் தென்படுவதில்லை. முன்பெல்லாம் டிவி நிகழ்ச்சிகள், பொது விழாக்கள் என்று அதிகமாக கலந்து கொண்ட அந்த நடிகர் இப்போது ரொம்பவும் அமைதியாக மாறி இருக்கிறார்.

Also read : பைக் மோகத்தால் ஊரை சுற்றும் 6 நடிகர்கள்.. அஜித்துக்கே டஃப் கொடுக்கும் வயதான காமெடியன்

அந்த நடிகர் வேறு யாரும் அல்ல தற்போது பல திரைப்படங்களில் பம்பரமாக சுழன்று நடித்துக் கொண்டிருக்கும் சூர்யா தான். இவரும் விஜய், அஜித் நடிக்க வந்த காலகட்டத்தில் தன் சினிமா பயணத்தை ஆரம்பித்தவர் தான். ஆனாலும் இவருக்கு அவர்கள் அளவுக்கு ஒரு இடத்தை பிடிக்க முடியவில்லை என்றால் எண்ணம் இருக்கிறதாம். அதனால் அவர் தற்போது யார் கண்ணிலும் படாமல் எந்த பத்திரிக்கைக்கும் பேட்டி கொடுக்காமல் தன்னைத்தானே செதுக்கிக் கொண்டு வருகிறார்

அதேபோன்று இவருடைய தொலைபேசி எண்ணை கூட மாற்றி விட்டாராம். முக்கியமான குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே தன்னுடைய நம்பரை கொடுத்து வரும் சூர்யா அதை யாரிடமும் பகிர வேண்டாம் என்றும் வேண்டுகோள் வைக்கிறாராம். இப்படி செய்தால் தான் விஜய் அஜித் அளவுக்கு நம்மால் ஒரு தனி இடத்தை பிடிக்க முடியும் என்பது தான் அவருடைய எண்ணம். அதையே நம்பும் அவர் தற்போது தன்னைத்தானே முழுவதுமாக மாற்றி வலம் வந்து கொண்டிருக்கிறார்.

Also read : பஞ்ச் டயலாக்கால் மோதிக்கொண்ட அஜித், விஜய்யின் 5 படங்கள்.. உச்சகட்ட எதிர்பார்ப்பில் வெளிவரும் வாரிசு VS துணிவு

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்