கண்ணீரும் கம்பளமாய் விஜய்யின் கார் பின்னாடி ஓடி வந்த பெண்மணி.. தளபதி செய்த உருக்கமான சம்பவம்

Actor Vijay : தளபதி விஜய் நேற்றைய தினம் வாக்களிக்க சென்றது தொலைக்காட்சியில் ஹாட் நியூஸாக போடப்பட்டது. அதாவது இதுவரை ஒரு நடிகராக விஜய் வாக்களிக்க சென்றதும், இந்த முறை கட்சியின் தலைவராக சென்றதுக்கும் வேறுபாடு இருக்கிறது.

நேற்று காலை முதலே விஜய் வீட்டின் முன்பு தொலைக்காட்சி பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்கள் என ஏராளமானோர் குவிந்திருந்தனர். ஒரு வழியாக கூட்ட நெரிசலில் விஜய் வாக்களித்து விட்டு சென்றார். மேலும் விஜய்யின் கையில் காயம் இருந்ததும் பலரையும் அதிர்ச்சியடைய செய்திருந்தது.

இந்நிலையில் விஜய் வாக்களித்து விட்டு வீடு திரும்பிய போது ஒரு பெண்மணி அவரது காரின் பின்னால் ஓடி வந்தார். உடனே காரை நிறுத்தி புஸ்ஸி ஆனந்த் அவர்களிடம் பேசிய போது ஒரு காகிதத்தை கொடுத்தார் அந்த பெண்மணி.

மகனை இழந்த பெண்மணி விஜய் இடம் வைத்த கோரிக்கை

பின் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர் எனது மகன் கல்லூரி படிக்கும் போது, பீஸ் கட்ட முடியவில்லை என்பதால் ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டான். மேலும் என்னுடைய மகளுக்கும் 4 லட்சம் கடன் வாங்கி திருமணம் செய்து வைத்தேன்.

இப்போது தனக்கு 59 வயது ஆவதாகவும், வீடுகளில் பாத்திரம் விளக்கி பார்க்கும் வேலை செய்து வந்த நிலையில் உடல்நிலை சரியாக இல்லை என்றும் குறிப்பிட்டார். இதனால் விஜய் நேரில் சந்திக்க பல நாள் இங்கேயே காத்திருந்தேன்.

மேலும் தற்போது அந்த காகிதத்தில் என்னுடைய தொலைபேசி நம்பர் எழுதிக் கொடுத்துள்ளேன் வேதனையுடன் அவர் தெரிவித்தார். கண்டிப்பாக விஜய் இவருக்கு ஏதாவது செய்வார் என்று நம்பிக்கையில் உள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்