அவசரப்பட்டு கழுத்தை நீட்டி அழுது புலம்பும் 2வது மனைவி.. வேலையை காட்டிய வில்லன் நடிகர்

பிரபல வில்லன் நடிகர் புதுசா கல்யாணம் கட்டிய இரண்டாவது மனைவியையும் கழட்டி விட்டு விட்டாராம். கடந்த சில வாரங்களாகவே இரண்டு பேருக்குள்ளும் பேச்சு வார்த்தை சரியில்லாத நிலையில் இப்போது அது முற்றிவிட்டதாக அதிர்ச்சி தகவல்கள் கசிந்து வருகிறது.

முதல் மனைவிக்கு அல்வா கொடுத்துவிட்டு புது கல்யாணம் செய்த அந்த நடிகர் சோசியல் மீடியாவில் ஏகப்பட்ட அலப்பறைகள் செய்து வந்தார். புது மனைவியோடு தேனிலவு கொண்டாடுவது, ஊர் சுற்றுவது என நடிகரின் பல போட்டோக்கள் வெளியாகி ஆச்சரியப்படுத்தியது.

ஆனால் ஆரம்பித்த வேகத்திலேயே இந்த உறவு இப்போது முடிவு பெறும் நிலைக்கு வந்து விட்டதாம். அதாவது நடிகர் இப்போது அக்கட தேசத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதற்காக அந்த ஊருக்கு அடிக்கடி சென்று வந்த நிலையில் தற்போது அங்கும் ஒரு நடிகையை உஷார் செய்து விட்டாராம்.

Also read: தமாசு நடிகரை வளைத்து போட்ட ஹீரோயின்.. பணத்துக்காக சின்ன வீடான கொடுமை

புது மனைவிக்கு கூட தெரியாமல் தனியாக நடிகை உடன் இந்த வில்லன் குடித்தனமே நடத்தி வந்திருக்கிறார். இது எப்படியோ இரண்டாவது மனைவியின் காதுக்கு வந்திருக்கிறது. அப்போதிலிருந்தே நடிகரின் வீட்டில் பூகம்பம் தான்.

இதனால் அவசரப்பட்டு கழுத்தை நீட்டி விட்டோமோ என அவருடைய மனைவி அழுது புலம்பி வருகிறாராம். இந்த துரோகத்தை பொறுத்து பொறுத்து பார்த்த அவர் இப்போது நடிகரை விட்டு பிரிந்து விவாகரத்து வாங்கும் முடிவுக்கு வந்துள்ளதாக ஷாக்கிங் தகவல்கள் பரவிக் கொண்டிருக்கிறது.

Also read: கோமாளி நடிகரை வச்சு செய்த நம்பர் நடிகை.. லிப் லாக் செய்யும்போது இனிச்சுச்சா?.