பிட்டு படம் எடுத்தது குத்தமா.? 14 வருட வாழ்க்கைக்கு விவாகரத்து மூலம் சங்கு ஊதிய விஜய் பட நடிகை

Vijay Movie Actress Got Divorce: இந்த காலத்தில் விவாகரத்து என்பது சாதாரண விஷயமாக மாறிக்கொண்டே வருகிறது. அதிலும் சினிமாவில் இந்த ஒரு விஷயம் தான் தலை விரித்து ஆடுகிறது. சும்மா தடுக்கி விழுந்துட்டாலே உடனே கோர்ட்டில் போய் விவாகரத்து வாங்கி விடுகிறார்கள். காதலித்து ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு இல்லற வாழ்க்கையில் பல வருடங்களாக வாழ்ந்து குழந்தைகளும் பெற்ற பிறகு, எங்களுக்குள் ஒத்து வரவில்லை என்று ஒத்த வார்த்தையில் மொத்த வாழ்க்கையும் முடித்துக் கொள்கிறார்கள்.

அப்படித்தான் நடிகர் தனுஷ் மற்றும் சமந்தாவும் விவாகரத்து செய்து தனியாக வாழ்ந்து வருகிறார்கள். என்னதான் ஒருவரை ஒருவர் மற்றவர்களை குறை சொல்லிக் கொண்டு வந்தாலும் கடைசியில் பாதிக்கப்பட்டு நிற்கிறது அவர்களுடைய குழந்தைகள் தான். ஆனால் அவர்களுக்கு அதைப் பற்றி எல்லாம் கவலை இல்லை தன்னுடைய சந்தோசம் தான் முக்கியம் என்று பணம் சம்பாதிப்பது மட்டும்தான் வாழ்க்கை எனற ஓடிக்கொண்டு போகிறார்கள்.

இவர்களில் தற்போது விஜய் பட நடிகையும் சேர்ந்து விட்டார். அவர் வேறு யாருமில்லை தமிழில் மிஸ்டர் ரோமியோ என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி குஷி படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஆடிய ஷில்பா ஷெட்டி தான். இவர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். அப்பொழுது 2009 ஆம் ஆண்டு ராஜ் குந்த்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பு இவருடைய வாழ்க்கை சந்தோசமாகவே அமைந்தது.

இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் இருக்கிறார்கள். இந்நிலையில் நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் பிசினஸிலும் பல லாபங்களை பெற்று வெற்றிகரமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டே வந்தார். ஆனால் அப்பொழுது இவருடைய கணவர் பிட்டு படங்களை எடுத்ததாக 2021 ஆம் ஆண்டு கைதானார்.

அதாவது பிட்டு படங்களை தயாரித்து அதை ஆன்லைனில் வெளியிட்டு சட்ட விரோத செயல்களை செய்து வந்ததாக இவர் பல மாதங்களாக சிறை தண்டனை அனுபவித்தார். அதன்பின் ஜாமுனில் விடுவிக்கப்பட்டு வெளியே வந்தார். என்னதான் ஜாமினில் வெளியே வந்தாலும் இது பெருத்த அவமானம் என்பதால் இவர்களுக்கிடையே விரிசல் ஏற்பட்டு விட்டது.

அதுவும் பிட்டு படத்தை எடுத்து அதன் மூலம் மொத்த பெயரையும் டேமேஜ் ஆக்கிவிட்டார் என்ற கடுப்பில் 14 வருடமாக வாழ்ந்து வந்த கணவரை பிரிந்து அவருக்கு விவாகரத்து கொடுத்து விட்டார். இதை தற்போது இவருடைய கணவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு எங்களுடைய திருமண வாழ்க்கை முடிந்து விட்டதாக போட்டிருக்கிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்