நாலாபக்கமும் பிரச்சனையை சந்தித்து வரும் விஜய்யின் வாரிசு.. எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றிய தயாரிப்பாளர்

master-vijay
master-vijay

தளபதி விஜய் முதல்முறையாக தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் இந்த படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் என பலரும் தெலுங்கு திரையுலகை சார்ந்தவர்கள்.

வாரிசு படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தனர். ஆனால் நாலாபக்கமும் வாரிசு படத்திற்கு தொடர்ந்து பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது. அதாவது தெலுங்கு திரையுலகில் மிகப்பெரிய கட்டுப்பாடு உள்ளது.

Also Read : வாரிசு படப்பிடிப்பில் லீக்கான வீடியோஸ்.. மீண்டும் ஹைதராபாத்துக்கு படையெடுக்கும் விஜய், வம்சி கூட்டணி

முழுவதுமாக தெலுங்கில் எடுக்கப்பட்ட படம் மற்றும் அங்கு முன்னணி நடிகர்களின் படங்கள் மட்டுமே பண்டிகை நாட்களில் திரையரங்குகளில் வெளியாகும் என்ற சட்டம் உள்ளது. இதனால் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாரிசு படத்தை தெலுங்கு சினிமாவில் வெளியிட முடியாது.

அதேபோல் தமிழிலும் அஜித்தின் துணிவு படம் வாரிசு படத்திற்கு போட்டியாக வெளியாகிறது. துணிவு படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றி உள்ளதால் இந்த படத்திற்கு அதிக தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகையால் இப்போது வாரிசு படம் வெளியானால் வசூல் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.

Also Read : உள்ளூர்ல தியேட்டர் இல்ல, வெளியூரில் ஆதிக்கம் செலுத்தும் விஜய்.. துணிவை விட 3 மடங்கு வியாபாரம் செய்த வாரிசு

இப்படி என்ன செய்வதென்று தெரியாமல் வாரிசு படக்குழு முழித்து வருகிறது. இந்த சூழலில் எரிகின்ற நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போல கே ராஜன் விஜய்யை விளாசி உள்ளார். அதாவது விஜய்க்கு தெலுங்கு சினிமாவில் மார்க்கெட் கிடையாது. சூர்யாவுக்கு தான் அங்கு அதிக மார்க்கெட் உள்ளது.

அதேபோல் விஜய்க்கு கேரளாவில் அதிக ரசிகர்கள் உள்ளனர். மேலும் பல கோடி சம்பளம் வாங்கும் விஜய் தமிழ் மொழியில் உள்ள இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு வாய்ப்பு தராமல் தெலுங்கு பக்கம் போனது மிகப்பெரிய தவறு. அதற்கான பலனை தற்போது அனுபவித்து வருகிறார்.

தெலுங்கு சினிமாவில் அவர்களின் நடிகர்கள் தான் வாழ வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதில் எந்த தவறும் இல்லை. ஆனால் விஜய் தெலுங்கு பக்கம் போனதற்கு இந்த படத்தின் மூலம் கண்டிப்பாக வருத்தப்படுவார் என கே ராஜன் கூறியுள்ளார். மேலும் விஜய் துணிவுடன் அஜித்தின் துணிவு படத்தை எப்படி கொள்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Also Read : எம்ஜிஆர், விஜய்க்கு அடுத்த வாரிசு நீங்கதான் என புகழ்ந்து தள்ளிய பிரபலம்.. ஓவர் புகழ்ச்சியால் புஷ்ன்ணு போன ஹீரோ!

Advertisement Amazon Prime Banner