தலைவர் 171 இல் உள்ள வரும் 90ஸ் சாக்லேட் ஹீரோ.. புதுசு புதுசா லோகேஷ் செய்யும் சம்பவம்

Thalaivar 171 : லோகேஷ் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இணையும் தலைவர் 171 படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக இந்த படத்தை தயாரிக்க உள்ள நிலையில் மல்டி ஸ்டார் படமாக தான் இப்படம் உருவாக இருக்கிறது.

ஏனென்றால் ஜெயிலர் படத்தில் சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி
ஷெரீப் என எக்கச்சக்க பிரபலங்கள் நடித்திருந்தனர். அதேபோல் லோகேஷின் விக்ரம், லியோ போன்ற படங்களும் மல்டி ஸ்டார் படமாக தான் வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில் தலைவர் 171 படத்தில் லோகேஷ் சத்யராஜை நடிக்க வைக்க உள்ளதாக செய்தி வெளியானது. ஆனால் சத்யராஜை லோகேஷ் சந்திக்கவே இல்லையாம். ஏனென்றால் தலைவர் 171 படத்தின் கதையை அவரிடம் சொல்ல வேண்டும்.

தலைவர் 171ல் நாகர்ஜுனா

அந்தக் கதை, கதாபாத்திரம் பிடித்தால் தான் ஓகே சொல்லுவார். இப்படி நிறைய விஷயங்கள் இதில் இருக்கிறது. இதனால் தெலுங்கு நடிகரை இப்போது தலைவர் 171ல் புக் செய்துள்ளார் லோகேஷ்.

தமிழ் சினிமாவில் ரஜினி எப்படியோ அவர் தான் தெலுங்கு சினிமாவில் நாகார்ஜுனா. அவர் இப்போதும் சில படங்களில் நடித்த வந்த நிலையில் தலைவர் 171ல் கமிட்டாகி இருக்கிறார்.

இவர் தமிழில் கார்த்திக் உடன் தோழா படத்தில் நடித்திருந்தார். மேலும் 90களில் பல இளம் பெண்களின் கனவு நாயகனாக நாகர்ஜுனா வலம் வந்தார். இப்போது திரும்பவும் தமிழ் சினிமாவில் நடிக்க உள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்