5 வருடங்களில் இல்லாத அளவு வேலையின்மையின் விகிதம் 0.5% ஆக குறைந்தது.. முதல்வரின் அசத்தலான நடவடிக்கை!

தமிழகத்தில் அதிமுக கட்சியின் சார்பில் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் முதல்வராக சிறப்பாக செயலாற்றி வருகிறார். இவரது நலத் திட்டங்களால் தமிழகம் தற்போது இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு முன்னோடி மாநிலமாக மாறியுள்ளது. ஏனென்றால், எடப்பாடியார் விவசாயத்தில் மகசூல் அதிகரிப்பது, தொழில் முதலீட்டை ஈர்ப்பது, மருத்துவத்தில்  சாதனை, நீர் மேலாண்மையை அதிகரிப்பது என பல திட்டங்களை செயல்படுத்தி தமிழகத்தை முன்னேற்றியுள்ளார்.

இந்த நிலையில் தற்போது  தமிழகத்தின் வேலையின்மை விகிதம் எடப்பாடியாரின் அதிரடியான நடவடிக்கைகளால் பெருமளவு குறைந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

அதாவது எடப்பாடியார் இந்த கொரோனா காலத்திலும், அன்னிய முதலீடுகளை ஈர்ப்பது, வேளாண் நடவடிக்கைகளை அதிகரிப்பது, தொழில்துறை சார்ந்த நடவடிக்கைகளை அதிகரிப்பது ஆகியவற்றை செவ்வனே செய்து, தற்போது கடந்த ஐந்து ஆண்டுகளில்  மிகக்குறைந்த வேலையின்மை விகிதத்தை உருவாக்கி காட்டி, சாதனை புரிந்துள்ளார்.  இந்த விகிதம் நவம்பர் மாதத்தில் 1.1 சதவீதமாக இருந்தது என்றும் கூறப்படுகிறது.

ஆனால், இந்த விகிதம் கொரோனா பேரிடர் காலமான, கடந்த ஏப்ரல் மாதத்தில் 49. 8 சதவீதமாகவும், இது படிப்படியாக குறைந்து ஜூலை மாதத்தில் 8.1 சதவீதமாகவும் இருந்ததாம். அதேபோல் செப்டம்பரில் 5% சதவீதமாக குறைந்தததோடு, அக்டோபரில் மேலும் 2.2%மாக குறைந்தது என்று சிஎம்ஐஇ தெரிவித்துள்ளது.

இதுபற்றி மூத்த மாநில அரசு அதிகாரியான மிஸ்ரா, தமிழக முதல்வரின்  அதிரடியான பொருளாதார  நடவடிக்கைகளால் தான் வேலை வாய்ப்பு பெருமளவு ஏற்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

அதேபோல், 2020 மே மாதத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாத திட்டத்தை எடப்பாடியார் அதிகரித்ததன் மூலம் கிராமப்புற மக்களுக்கு அதிக வேலைவாய்ப்பு கிடைத்தது என்றும் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் இந்தத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 41 மில்லியன் தனிநபர் வேலைவாய்ப்பு கிடைக்கப் பெற்றதாகவும், மற்ற மாநிலங்களை காட்டிலும் இது மிக அதிகமானது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

எனவே, முதல்வரின் அசத்தலான நடவடிக்கைகளால், தமிழகம் இவ்வாறு  வேலையின்மை விகிதத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத சாதனை புரிந்து இருப்பதை கண்ட பல்வேறு தரப்பினரும், எடப்பாடியாருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

edappadi-palaniswami
edappadi-palaniswami
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்