வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

சந்தேகப்பட வைத்த ஸ்ரீதேவியின் மரணம்.. போனி கபூருக்கு நடந்த விசாரணையில் வெளியான உண்மை

Actress Sridevi: ஸ்ரீதேவி இறந்து 5 ஆண்டுகள் கடந்த பிறகும் கூட அவருடைய மரணம் பல சந்தேகங்களை எழுப்பிக் கொண்டு தான் இருக்கிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அவர் துபாய் சென்றபோது அங்கு ஹோட்டல் பாத் டப்பில் தவறி விழுந்து உயிரிழந்தார். இது கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

அதைத்தொடர்ந்து அவருடைய மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், இன்சூரன்ஸ் பணத்திற்கு ஆசைப்பட்டு போனி கபூர் அவரை கொன்று விட்டதாகவும் பல செய்திகள் வெளியானது. அப்போதெல்லாம் அதைப்பற்றி வாய் திறக்காத ஸ்ரீதேவியின் கணவர் தற்போது முதல் முறையாக இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

Also read: சிவாஜி, எம்ஜிஆர் உடன் குழந்தை நட்சத்திரமாய் கலக்கிய ஸ்ரீதேவியின் 6 படங்கள்.. மூன்று வயதில் முருகன் அவதாரம்

அவர் கூறியிருப்பதாவது, என்னுடைய அன்பு மனைவியை நானே கொன்று விட்டேன் என மனசாட்சியே இல்லாமல் பலரும் பேசினார்கள். துபாய் அரசாங்கம் கூட அந்த எண்ணத்தில் தான் என்னிடம் 48 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள். அதிலும் உண்மையை கண்டறியும் டெஸ்ட் கூட எடுக்கப்பட்டது.

அந்த தருணம் எனக்கு மிகப்பெரும் வேதனையாக இருந்தது. ஆனால் அந்த விசாரணை எல்லாம் முடிந்து டெஸ்ட் ரிசல்ட் வந்தபோது இது திட்டமிட்ட கொலை கிடையாது எதிர்பாராத மரணம் என்று தெரிய வந்தது. அதன் பிறகு தான் அவருடைய உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு அரசாங்கம் அனுமதித்தது.

Also read: 40 வயதில் பாலிவுட் கேரியரை தொடங்கிய 5 நடிகைகள்.. கபூர் குடும்பத்தின் மருமகளாக கலக்கிய ஸ்ரீதேவி

இருந்தாலும் என் மீது இப்படி ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. உண்மையில் ஸ்ரீதேவி மயங்கி விழுந்ததற்கு காரணம் அவருக்கு இருந்த லோ பிபி பிரச்சனை தான். ஏனென்றால் அவர் உடம்பை எப்போதும் ஒல்லியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக சரியாக சாப்பிட மாட்டார்.

மருத்துவர்கள் இது குறித்து அட்வைஸ் செய்த போதும் கூட அவர் கேட்கவில்லை. சரியான டயட் இல்லாமல் அவர் வீட்டிலேயே பலமுறை மயங்கி விழுந்து இருக்கிறார் என பல நாள் உண்மையையும் அவர் பகிர்ந்துள்ளார். இதன் மூலம் ஸ்ரீதேவியின் மரணத்திற்கான காரணமும் வெட்ட வெளிச்சமாகி உள்ளது.

Also read: ஸ்ரீதேவி நடிப்பில் பிளாக்பஸ்டர் ஹிட்டான 6 படங்கள்.. என்றைக்கும் நினைவில் இருக்கும் மயிலு

- Advertisement -

Trending News