ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

தந்தையை தொடர்ந்து அஜித்தின் நண்பருக்கு நேர்ந்த சோகம்.. கவலையில் உறைந்து போயுள்ள ஏகே

நடிகர் அஜித்தின் தந்தை அண்மையில் உடல்நிலை சரியில்லாமல் இறந்ததையடுத்து, அவரது உடல் சென்னை பெசன்ட் நகரில் உள்ள இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அந்த சமயத்தில் நடிகர் அஜித் தன் மனைவி, பிள்ளைகளுடன் துபாயில் சுற்றுலா சென்ற நிலையில், இப்படி ஒரு துயர் சம்பவம் நடந்ததையொட்டி அஜித் குடும்பத்துடன் சென்னை திரும்பினார்.

மேலும் தற்போது அஜித்தின் ஏகே62 படத்தில் நடிக்க மும்முரமாக உள்ள நிலையில், இப்படத்தின் போஸ்டர் மற்றும் டைட்டிலை வரும் மே மாதம் 1 ஆம் தேதி அஜித் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு வெளியிட உள்ளனர். மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாக உள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. மேலும் அடுத்த வருட பொங்கலுக்குள் இப்படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது.

Also Read:  மொத்தத்தையும் லிஸ்ட் போட்ட அஜித்.. அப்பாடி மொத்த கண்டத்தில் இருந்தும் தப்பித்த மகிழ்திருமேனி

இதனிடையே அஜித்தின் நண்பர் ஒருவருக்கு நேர்ந்த சோகத்தால் மொத்த திரைபிரபலங்களும் கவலையில் உள்ளனர். நடிகர் அஜித்தின் ஆரம்பக்கால படங்கள் தோல்வியானதையடுத்து, இவரை வைத்து படம் பண்ண பல தயாரிப்பாளர்கள் தயங்கினார்கள். அந்த சமயத்தில் அஜித்தின் நடிப்பில் 1997 ஆம் ஆண்டு வெளியான ராசி படத்தை தயாரித்தவர் தான் தயாரிப்பாளர் எஸ்.எஸ். சக்கரவர்த்தி.

இப்படத்தை தொடர்ந்து அஜித்தின் வாலி, முகவரி, சிட்டிசன், ரெட், வில்லன், ஆஞ்சநேயா, ஜீ, வரலாறு உள்ளிட்ட படங்களை தனது நிக் ஆர்ட்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலமாக எஸ்.எஸ் சக்ரவர்த்தி தயாரித்தார். இவர் தயாரிப்பில் அஜித் நடித்த அத்தனை படங்களும் ஹிட்டான நிலையில், இருவரும் நல்ல நண்பர்களாக வலம் வந்தனர். இந்நிலையில் தயாரிப்பாளர் எஸ்.எஸ்.சக்ரவர்த்திக்கு தற்போது புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Also Read: அஜித்தால் பொன்னியின் செல்வன் 2 ரிலீஸில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்.. லைக்கா எடுத்த திடீர் முடிவு

அஜித்தின் படங்களையும் தாண்டி சிம்புவின் காளை, வாலு உள்ளிட்ட படங்களையும் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி தயாரித்த நிலையில், 2015 ஆம் ஆண்டு வெளியான வாலு படம் பிளாப்பானதால் கடனுக்கு உள்ளனர். இதனிடையே 8 வருடங்களுக்கும் மேலாக எந்த ஒரு படங்களையும் தயாரிக்காமல் இருந்த எஸ்.எஸ்.சக்ரவர்த்திக்கு, திடீரென புற்றுநோய் வந்துள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஒரு வாரத்துக்கு முன்பு தான் அவரது தந்தை காலமானது கூடுதல் சோகத்தை அளிக்கிறது. இதனிடையே இவருக்கு புற்றுநோய் வந்த விஷயம் அஜித்திற்கு தெரியுமா என்பது கூட யாருக்கும் தெரியவில்லை. அஜித்துக்கு இந்த விஷயம் மட்டும் தெரிந்தால் கட்டாயம் அவர் மன வேதனைக்கு உள்ளாவார். மேலும் தன் நண்பனை குணமாக்க அஜித், எந்த எல்லைக்கும் சென்று அவரை காப்பாற்றக்கூடியவர்.

Also Read: அஜித்திடம் இப்ப வரை இருக்கும் ஒரே கெட்ட பழக்கம்.. எவ்வளவு முயற்சித்தும் ஷாலினியால் மாற்ற முடியல

- Advertisement -

Trending News