ரஜினியே கடுப்பாகி கட்டிய முடிவு.. எல்லாருடைய வாயையும் அடைத்த சூப்பர் ஸ்டார்

Actor Rajini: ஜெயிலர் படத்தில் தற்போது நடித்து முடித்துள்ள ரஜினி அதன் ரிலீஸ் நாளை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். பான் இந்தியா நடிகர்களை துணையாக வைத்து சம்பவம் செய்திருக்கும் சூப்பர் ஸ்டார் இதன் மூலம் பல சர்ச்சைகளுக்கும் பதிலடி கொடுக்க இருக்கிறார்.

இது சமீபத்தில் வெளியான ஹுக்கும் பாடலிலேயே வெளிப்படையாக தெரிந்தது. வளர்ந்து வரும் நடிகர்களில் இருந்து பாக்ஸ் ஆபிஸ் ஹீரோக்கள் வரை பலரும் சூப்பர் ஸ்டார் இடத்தை பிடிக்க கங்கணம் கட்டி வந்தனர். இந்த நிலையில் நான் தான் ஒரே சூப்பர் ஸ்டார் என்று அந்த பாடல் வரிகள் மூலம் ரஜினி சொல்லியது இப்போது விவாதம் ஆகி இருக்கிறது.

Also read: ஹுக்கும் பாடலைக் கேட்டு வாய்ஸ் மெசேஜ் அனுப்பிய ரஜினி.. இவ்வளவு சர்ச்சை போயிட்டு இருக்கு இப்படி சொல்லிட்டாரே!

ரஜினி திடீரென எதற்காக இப்படி சொல்ல வேண்டும் என்ற கேள்வி ஒரு புறம் இருந்தாலும் இதன் மூலம் அவர் பல நாள் பிரச்சனைக்கு முடிவு கட்டி விட்டதாகவே தெரிகிறது. ஏனென்றால் இந்த பாடல் வரிகளை ரஜினியின் ஒப்புதல் பெற்ற பிறகு தான் படமாக்கி இருக்கிறார்கள்.

அதன்படி இப்பாடலை எழுதிய சூப்பர் சுப்பு ரஜினியின் ரசிகன் என்ற நிலைப்பாட்டில் இருந்து இதன் வரிகளை அற்புதமாக எழுதிக் கொடுத்திருக்கிறார். அதை பார்த்த ரஜினியும் சந்தோஷமாக ஒப்புதல் வழங்கி இருக்கிறார். அந்த வகையில் இப்போது சூப்பர் ஸ்டார் யார் என்ற சர்ச்சை முடிவுக்கு வந்திருக்கிறது.

Also read: கவர்ச்சி நடிகையுடன் தொடர்பில் இருந்த ரஜினி.. பல வருட ரகசியத்தை போட்டுடைத்த பிரபலம்

ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தான் அது நான் மட்டும்தான் என ரஜினி ஒரே பாட்டின் மூலம் நெத்தியடியாக சொல்லிவிட்டார். அது மட்டுமல்லாமல் அனல் பறக்கும் இந்த பாடல் வரிகள் தான் இப்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. ரஜினியும் இந்த சந்தோஷத்தை இப்போது மனதார அனுபவித்துக் கொண்டிருக்கிறாராம்.

பொதுவாகவே இது போன்ற விஷயங்களை கண்டு கொள்ளாமல் ஒதுங்கி இருக்கும் சூப்பர் ஸ்டார் இப்படி இறங்கி அடித்தது பலருக்கும் ஆச்சரியமாக இருந்தாலும் இது வரவேற்கப்படுகிறது என்பது தான் நிதர்சனமான உண்மை. அந்த வகையில் எல்லோர் வாயையும் ஒரே பாட்டால் அடைத்த ரஜினி படத்தில் என்ன மாதிரியான சம்பவங்கள் செய்திருக்கிறார் என்பதை அறிய ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Also read: மடுவை பார்த்து பயந்த அண்ணாமலை.. பக்குவத்தை இழந்து சிறுபிள்ளைத்தனமாக பதிலடி கொடுத்த ரஜினி

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்