உங்களுக்கு விவாகரத்து ஆயிடுச்சா.! மேடையில் நெத்தியடி பதிலை கொடுத்த சுப்பிரமணியபுரம் நடிகை

Subramaniapuram: இயக்குனராகவும், நடிகராகவும் சசிகுமாருக்கு மிகப்பெரும் அடையாளத்தை கொடுத்த படம் தான் சுப்பிரமணியபுரம். அவருக்கு மட்டுமல்லாமல் ஜெய்யும் ஒரு சிறந்த நடிகர் என்பதை நிரூபித்த பெருமையும் இப்படத்திற்கு உண்டு.

இந்நிலையில் இப்படத்தின் நாயகி சுவாதி தன்னுடைய விவாகரத்து பற்றி முதல் முறையாக மனம் திறந்து பேசி இருக்கிறார். கடந்த 2018 ஆம் ஆண்டு விகாஸ் வாசு என்பவருடன் இவருக்கு திருமணம் நடந்தது. அதைத்தொடர்ந்து இவருடைய 5 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்ததாக சமீபத்தில் செய்திகள் வெளியானது.

Also read: திருமணத்திற்கு முன்பே அந்தரங்க உறவு தவறு இல்ல.. ஓப்பனாக போட்டுடைத்த சசிகுமார் பட குடும்ப குத்து விளக்கு

இதற்கு முக்கிய காரணம் அவர் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் இருந்த திருமண புகைப்படங்களை நீக்கியது தான். இது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் சுவாதி எந்த ஒரு விளக்கத்தையும் கொடுக்காமல் இருந்தார்.

ஆனால் சமீபத்தில் தெலுங்கு பட விழாவில் அவர் கலந்து கொண்ட போது பத்திரிக்கையாளர் ஒருவர் இது குறித்து வெளிப்படையாக கேள்வி எழுப்பினார். பொதுவாக நடிகைகள் பலரும் இது போன்ற தனிப்பட்ட விஷயங்களை மேடையில் பேச மாட்டார்கள்.

Also read: வெற்றிமாறனுடன் கூட்டணி போடும் சசிகுமார்.. மீண்டும் கதாநாயகனாக அவதாரம் எடுக்கும் சூரி

ஆனால் சில மீடியாக்கள் இது போன்ற சங்கடமான கேள்விகளை கேட்பதையே வழக்கமாக வைத்திருக்கிறது. அப்படித்தான் அந்த நிருபர் சுவாதியை விடாமல் விவாகரத்து பற்றி கேள்வி கேட்டு தொந்தரவு செய்தார். இதனால் டென்ஷனான அவர் கொடுத்த பதில் தான் நெத்தியடியாக இருந்தது. அவர் கூறி இருப்பதாவது, இதற்கு நான் பதில் சொல்ல மாட்டேன்.

ஏனென்றால் எனக்கு என்று சில விதிமுறைகளை நான் வைத்துள்ளேன். அதில் ஒன்றுதான் தனிப்பட்ட விஷயங்களை பொதுவெளியில் பகிர்ந்து கொள்ள கூடாது என்பது. அதனால் உங்களுக்கு நான் பதில் சொல்ல மாட்டேன் என்று ஒரே போடாக போட்டார். இதனால் பாவம் கேள்வி கேட்டவரின் முகம் தான் சுருங்கி போனது. அந்த வகையில் சுவாதியின் இந்த தைரியமான பதில் பாராட்டுகளை பெற்று வருகிறது.

Also read: லியோ காட்டிய பயத்தில் செப்டம்பரில் வெளிவரும் 30 படங்கள்.. ஒரு ஹிட்டுக்காக தவமிருக்கும் ஜெயம் ரவி முதல் சசிகுமார் வரை