நாலு செகண்ட்ல உயிர் தப்பிய மகன்.. பரபரப்பாக பேட்டி அளித்த ஏஆர் ரகுமான்

இசையமைப்பாளராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், இயக்குனர் என அடுத்தடுத்த அவதாரங்களை எடுத்துக் கொண்டிருக்கும்  ஆஸ்கார் நாயகன்  ஏஆர் ரகுமான் சமீபத்திய பேட்டி ஒன்று தன்னுடைய மகன் 4 நொடியில் உயிர் பிழைத்த சம்பவத்தை மனம் திறந்து வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

மனிதர்களாக பிறந்திருக்கும் அனைவருமே இந்த நொடி உயிர் பிழைத்து இருக்கிறோம் என்றால், அது கடவுளின் ஆசிர்வாதத்தால் மட்டும்தான். இந்த நொடியில் நாம் இங்கு நலமுடன் இருக்கிறோம். ஆனால் அதே சமயம் வேற வேற நாடுகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக  உயிரிழக்கின்றனர்.

Also Read: அட்லீ, ஏஆர் ரகுமானுடன் கூட்டணி போடுவது உறுதியா? அஜித் தரப்பில் இருந்து வெளிவந்த ஏகே 63 அப்டேட்

நிலநடுக்கம், மழை பொழிவு போன்ற இயற்கை சீற்றங்களினால்  மக்கள் ஆயிரக்கணக்கில் உயிரிழக்கின்றனர். அதேபோன்று நான்கு நொடியில் என்னுடைய மகன் உயிர் பிழைத்திருக்கிறார். மும்பையில் ஒரு சூட்டிங் ஸ்பாட்டில் பயங்கர விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக அதிலிருந்து ஏஆர் ரகுமானின் மகன் தப்பித்திருக்கிறார்.

இதற்கு எல்லாம் காரணம் நம்மை பாதுகாத்துக் கொண்டிருக்கும் கடவுளின் அனுகிரகம் தான். அதற்காக நாம் எப்போதும் நன்றி செலுத்த வேண்டும் என்று ஏஆர் ரகுமான் உணர்ச்சிப் பூர்வமாக சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருக்கிறார். இவருடைய இந்த கருத்துக்கு  நெட்டிசன்கள் சரமாரியாக கருத்து தெரிவிக்கின்றனர்.

Also Read: ஏஆர் ரகுமான் இடத்தை பிடித்து விட்ட பிரபல இசையமைப்பாளர்.. கைவசம் உள்ள 6 பிரம்மாண்ட படங்கள்

‘நீங்க இன்னும் கொஞ்சம் புண்ணியம் செய்யுங்கள். வெறும் பணத்தை சேமித்து வைத்துக் கொண்டு வெத்து வாழ்க்கை வாழாதீர்கள்’ என்று ஏஆர் ரகுமானின் பேட்டிக்கு பதில் அளித்துள்ளனர். இன்னும் சிலர்  ‘அப்ப செத்தவன் எல்லாம்  ஏன் செத்தான்!’ என்று எடக்கு முடக்கான கேள்விகளையும் கேட்கின்றனர்.

இருப்பினும் வேறு சிலர் ஏஆர் ரகுமான் தன்னுடைய மகன் உயிர் பிழைப்பதற்கு கடவுள் தான் காரணம் என்று நம்பிக்கையுடன் சொன்னதை நம்பி அவருடைய இந்த பேட்டியை லைக் செய்கின்றனர். ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரகுமானின் இசையில் 2023 ஆம் ஆண்டு 6 படங்கள் அடுத்தடுத்து வெளி வருகிறது. 

Also Read: ஹீரோக்களை தாண்டி அதிக சம்பளம் வாங்கும் 5 இசையமைப்பாளர்கள்.. ரஹ்மானே ஓரம் கட்டிய பிரபலம்

அதிலும் சிவகார்த்திகேயனின் அயலான், சிம்புவின் பத்து தல, பொன்னியின் செல்வன் 2 போன்ற படங்களில் ஏஆர் ரகுமான் இசை அமைத்த பாடல்களை கேட்பதற்கென ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Stay Connected

1,170,287FansLike
132,026FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -