15 வருடத்திற்கு பின், போதைப் பழக்கத்திலிருந்து மீண்ட வாரிசு நடிகர்.. வெப் சீரிஸில் ரீ-என்ட்ரி!

எண்பதுகளில் தன்னுடைய நடனத் திறமையினால் நன்கு அறியப்பட்ட நடிகர் ஆனந்த் பாபு, தொடக்கத்தில் தனது சினிமா பயணத்தை துணை நடிகராக ஒரு சில படங்களில் நடித்து, அதன் பிறகு ஒரு சில படங்களில் கதாநாயகனாக அறிமுகமானார்.

நடிகர் ஆனந்த் பாபு, பழம்பெரும் நகைச்சுவை நடிகர் நாகேஷ் அவர்களின் மகன் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனந்த் பாபு கடந்த 1985ஆம் ஆண்டு சாந்தி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு இவருடைய இளைய மகனான கஜேஷ் இப்போது தமிழ் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

வெள்ளித்திரையில் கதாநாயகனாக ரசிகர்களின் மனதைக் கவர்ந்த நடிகர் ஆனந்த் பாபு, 2006 ஆம் ஆண்டு போதை பழக்கத்திற்கு அடிமையாகி தன்னுடைய கேரியரை பாலாகிக்கொண்டார்.

அதன் பிறகு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த ஆனந்த்பாபு கொஞ்சம் கொஞ்சமாக போதை பழக்கத்தில் இருந்து மீண்டு தற்போது முழுமையாக குணமடைந்துள்ளார்.

எனவே மீண்டும் திரையில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில், ஆனந்த் பாபு தற்போது வெப் சீரிஸ்களில் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளார். தற்போது இவர் சின்னத்திரையில் ஒரு சில நாடகங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான சீரியல் ஆன ‘மௌனராகம்’ என்ற சீரியலில் வில்லனாக நடித்து ரசிகர்களிடம் மீண்டும் நல்ல வரவேற்பைப் பெற்றார். அதன் பிறகு ஆனந்த் பாபு தற்போது வெப் சீரிஸ்களில் மீண்டும் திரைத்துறைக்கு ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

nagesh-anand-babu-family-photos-cinemapettai
nagesh-anand-babu-family-photos-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்