என் புருஷனோட சேர்ந்துட்டே.. முரட்டு சிங்கிளை கட்டிப்பிடித்தபடி புகைப்படம் வெளியிட்ட பாடகி

ஏழு கழுதை வயசாகியும் இன்னமும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் முரட்டு சிங்கிள் ஒருவரை இறுக்க கட்டிப் பிடித்தது மட்டுமின்றி, ‘என்னோட புருஷன் உடன் சேர்ந்துட்டேன்’ என பிரபல பாடகி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ஷாக் கொடுத்திருக்கிறார்.

இதைப் பார்த்த பலரும் அந்த முரட்டு சிங்கிளுக்கு திருமணம் ஆகிவிட்டதா என பலரும் குழப்பத்தில் உள்ளனர். இயக்குனர், நடிகர், பாடகர், இசையமைப்பாளர் என பன்முகத் திறமை கொண்ட அந்த நடிகர் எப்போது திருமணம் செய்து கொள்வார் என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

Also Read: தத்ரூப காட்சிக்காக சுடுகாட்டுக்கு போன பட குழு.. அலறி அடித்து மயக்கம் போட்ட நடிகை

இதனால் 40 வயதை கடந்த நிலையிலும் முரட்டு சிங்கிளாகவே சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கும் அவர், பேட்டியிலும் திருமணத்தை பற்றி பேசினால் ‘திருமணம் நடக்கும் போது நடக்கும்’ என கூலாக பதில் அளித்து வருகிறார். ஆனால் தற்போது பிரபல பின்னணி பாடகி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘என் புருஷன் தான் எனக்கு மட்டும்தான்’ என்ற பாடலை ஒலிக்க விட்டு பிரேம்ஜியை இறுக்க கட்டிப்பிடித்தபடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.

அத்துடன் அந்தப் புகைப்படத்தில் ‘என் புருஷனுடன் மறுபடியும் சேர்ந்து விட்டேன்’ என்றும் பதிவிட்டுள்ளார். அந்த முரட்டு சிங்கிள் வேறு யாரும் அல்ல பிரேம்ஜி தான். அவரை தான் புருஷன் என்று பின்னணிப் பாடகி வினைதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

Also Read: அட்ஜஸ்ட்மென்ட்டுக்கு ஓகே சொல்லி சிக்னல் கொடுத்த நடிகை.. அடுத்தடுத்து குவியும் வாய்ப்பு

இதைப் பார்த்த பலரும் ஷாக் ஆகி பிரேம்ஜிக்கு கல்யாணம் ஆயிருச்சா! என கேள்வி எழுப்புகின்றனர். ஒருவேளை பிரேம்ஜியும் வினைதாவும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்களா? என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இதன் பிறகு இவர்களுக்கு இருவரும் நிஜமாகவே திருமணம் ஆகி விட்டதா என்பதை அவர்கள் சொன்னால்தான் உண்மை தெரியவரும்.

படத்தை நடிப்பது போல நிஜ வாழ்க்கையில் ஜாலியாக இருக்கும் பிரேம்ஜி, சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருப்பார். ஆகையால் விரைவில் இதற்கான பதிலை பிரேம்ஜி தன்னுடைய சோசியல் மீடியாவில் தெரிவிப்பார் என்றும் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

முரட்டு சிங்கிளை கட்டிப்பிடித்தபடி புகைப்படம் வெளியிட்ட பாடகி

premgi-cinemapettai
premgi-cinemapettai

Also Read: கூடிய விரைவில் சினிமாவில் கேரியரை தொலைக்க போகும் நடிகை.. திமிரை காட்டியதால் வந்த விளைவு

Sharing Is Caring:

அதிகம் படித்தவை