நான்தான் நம்பர் ஒன், மிதப்பில் இருந்த நடிகை.. சைலன்டாக நம்பர் நடிகையை ஓவர் டேக் செய்த ஹீரோயின்

நடிகர்களுக்குள் எப்படி ஒரு போட்டி இருக்கிறதோ அதே போல டாப் ஹீரோயின்களுக்கும் போட்டி நடந்து வருவது சகஜம் தான். அதில் கொஞ்ச காலம் ஓய்ந்து போயிருந்த நம்பர் நடிகைகளுக்குள் இருந்த போட்டி மீண்டும் துளிர் விட்டு இருக்கிறது. 20 வருடங்களுக்கும் மேலாக கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் சின்ன நம்பர் நடிகை இடையில் பல தோல்வி படங்களை கொடுத்ததால் வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார்.

இனிமேல் மார்க்கெட் அவ்வளவுதான் என்று இருந்த நடிகைக்கு வரப்பிரசாதமாக கிடைத்தது தான் அந்த இளவரசி கேரக்டர். அந்தப் படத்தில் கூடுதல் பளபளப்பும், அழகு தேவதையுமாக இருந்த அவர் இப்போது மீண்டும் தன்னுடைய மார்க்கெட்டை ஸ்டடி செய்திருக்கிறார். மேலும் நடிகையைத் தேடி இப்போது வாய்ப்புகள் முட்டி மோதிக் கொண்டிருக்கின்றன.

அந்த வகையில் கோலிவுட்டின் டாப் ஹீரோக்களின் திரைப்படங்களில் நடிகை நடிக்க இருப்பதாக ஒரு பேச்சு அடிபட்டு வருகிறது. ஆனால் அந்த இடத்திற்கு பெரிய நம்பர் நடிகை தான் போட்டி போட்டு வந்தார். அதிலும் பெரிய நடிகரை வைத்து கணவர் இயக்கும் படத்திலர் எப்படியாவது ஹீரோயின் சான்சை பிடித்து விட வேண்டும் என்று நடிகை முழு முயற்சியில் இறங்கி இருந்தார்.

Also read: மார்பிங் வீடியோவால் குடும்பத்தை இழந்த 40 வயது நடிகை.. இன்று வரை மீள முடியாமல் போன சோகம்

ஆனால் அதற்கு வேட்டு வைப்பது போல் சின்ன நம்பர் நடிகை அந்த வாய்ப்பை பறித்துக் கொண்டது நடிகைக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அது மட்டுமல்லாமல் சமீபத்தில் நடிகையின் நடிப்பில் வெளிவந்த படமும் ஊத்திக்கொண்டது. ஆனாலும் நடிகை படம் வெற்றி என சமீபத்தில் ஒரு அறிக்கையை விட்டு அனைவரையும் அதிர்ச்சியாக்கினார்.

விசாரித்து பார்த்ததில் நடிகை இப்படி ஒரு அறிவிப்பு விடுவதற்கு காரணமே சின்ன நம்பர் நடிகை தானாம். ஏனென்றால் இத்தனை காலமும் நான் தான் நம்பர் ஒன் என்னுடைய இடத்தை யாராலும் அசைக்க முடியாது என்ற மிதப்புடன் இருந்த நடிகைக்கு இப்போது பேரிடியாக இருக்கிறது போட்டி நடிகையின் வரவு. அதனால்தான் இப்படி ஒரு கெத்தை காட்டி இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது. ஆனாலும் சின்ன நம்பர் நடிகை சத்தம் இல்லாமல் அவரை ஓவர் டேக் செய்து விட்டதுதான் உண்மை என்று பேசப்பட்டு வருகிறது.

Also read: சொதப்பிய சினிமா என்ட்ரி.. மீண்டும் பழைய ரூட்டுக்கு திரும்பிய பப்லி நடிகை

Stay Connected

1,170,287FansLike
132,018FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -